பக்கம் எண் :

சீறாப்புராணம்

821


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு நிறைவேற்றவே புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கருத்தில் பிரகாசத்தைப் பெற்ற பெரிய தந்தையாகிய அபீத்தாலி பென்பவர் உயிர் துறந்து அதனாற்றங்கிய துன்பமானது அதிகப்பட வருத்தமுற்ற காலத்தில் வரிசையாக நிலைக்கும் பெரிய அழகையுடைய நாயகியான கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்களும் மரித்துப் போக நிலையாத கலக்கமானது வந்து சேர்ந்தது.