பக்கம் எண் :

சீறாப்புராணம்

823


முதற்பாகம்
 

மேலோங்கின குறைந்தில்லன. இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் ஆதியில் விதியை அமைத்த வண்ணம் அபீத்தாலி பென்பவர் இங்கு உயிர் துறந்து பூரணமாக மாதமும் மூன்றென்று நாட்களும் சென்றன.

 

2211. காய முள்ளுறை யுயிரெனு மிருவருங் கம்புக்

     காய துமினத் தவர்பகை யையுமனத் தடக்கித்

     தூய நாயகன் தீனிலைப் பெருக்கிடுந் துணிவாற்

     றாயி பென்னுமத் தலத்தினுக் கெழுந்தரு ளினரே.

4

      (இ-ள்) அவ்வாறு செல்லத் தங்களின் சரீரத்தினகந் தங்கா நிற்கும் ஜீவனென்னும்படியான அபீத்தாலி பென்பவரும் கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்களும் வானலோகத்தின்கண் போய்ப் புகுதலாயதையும் இனத்தவர்களின் விரோதத்தையும் இருதயத்தின் கண் அடங்கிக் கொண்டு பரிசுத்தத்தை யுடைய நாயகனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையைப் பெருகச் செய்திடும் துணிவினால் தாயிபென்று கூறும் அந்த இடத்திற்கு எழுந்தருளினார்கள்.

 

2212. சவிகொள் வெண்சுதை மாமதிள் தாயிபி லிபுனு

     அபுது யாலிலென் றிடும்பெயர்க் குறைசியென் பவனை

     நபி்க ணாயகங் கண்டன ரவனெதிர் நடந்து

     குவிகை கொண்டுபின் னிவரொடு மனைகுறு கினனே.

5

      (இ-ள்) நபிகட் பெருமானாரான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய சுண்ணச் சாந்து தீற்றிய மகத்தான கோட்டை மதில்களையுடைய அந்தத் தாயிபென்னும் நகரத்தில் இபுனு அபுது யாலிலென்று கூறிடும் நாமத்தையுடைய குறைஷி யென்பவனைக் கண்டார்கள். அவன் எதிராக நடந்து வந்து கைகளைக் குவித்துக் பின்னர் இவர்களோடும் தனது வீட்டைப் போய்ச் சேர்ந்தான்.

 

2213. மனையி னிற்கொடு போய்முகம் மதுதமை யிருத்தி

     யினிய வாசகத் தன்பொடும் புகழ்ந்தெடுத் தேத்தி

     வனச மென்மலர்ச் செழும்பதத் திணைவருந் திடவே

     தனிய னென்வயின் சார்ந்தவை சாற்றுக வென்றான்.

6

      (இ-ள்) அவ்வாறு வீட்டின்கண் கூட்டிக் கொண்டு போய் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இருக்கச் செய்து இனிமையான வார்த்தைகளினால் அன்புடன் துதித்து எடுத்துப் போற்றி மெல்லிய தாமரை மலர்போலும் செழுமை யாகிய இருபாதங்களும் வருந்தும் வண்ணம் தாங்கள்