முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்,
தெய்வீகந் தங்கிய நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு காயப்பட்டதின் துன்பமும்,
பசியினது உள்ளுலைவும், மாறுபட்டவர்களான அந்தச் சிறுவர்கள் பின்பற்றியதில் நிகழ்ந்த சரீரத்தினது
மலைவும், ஆகிய இவைகள் நமக்கு மோட்சத்தைக் கொண்ட நபி பட்டத்தைக் கொடுத்தவனான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணிய மென்று பெரிதாய்த் தேறுதல் கொண்டு அவ்விடத்தில் தங்கியிருந்தார்கள்.
2227.
இருந்து மெய்வருத் தந்தவிர்த் தந்தரத் திடத்திற்
றிருந்த நோக்கினர்
மங்குலின் வயின்சிபு ரீலைப்
பொருந்தக் கண்டுகண்
களித்தனர் புதியவன் றூதர்
விரிந்த
வெள்ளிடை கடந்தணித் துறவிளங் கினரால்.
20
(இ-ள்) அவ்வாறு
அங்கு தங்கியிருந்து சரீரத்தினது வருத்தங்களை யொழித்துச் செவ்வையாக ஆகாயத்தின்கண்
பார்க்க ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்களை அவ் வாகாயத்தினிடத்து பொருந்தும்படி கண்டு கண்களானவை
மகிழ்ச்சி யடையப் பெற்றார்கள். புதிய ஆலத்தை யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்
தூதராகிய அஜ்ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்களுமன் பரந்த அந்த வெள்ளிய தானத்தைத் தாண்டிச்
சமீபமாய் வந்து பிரகாசித்தார்கள்.
2228.
வந்த டுத்திறை
யவன்சலா முரைத்துமெய் வருந்த
லிந்த மாநிலத்
திற்றைநும் மினத்தவ ரிடரா
லந்த நாயக னமரரில்
வரைக்கர சவரை
யுந்த மேவலுக் கேவின
னெனவெடுத் துரைத்தார்.
21
(இ-ள்) அவ்வாறு,
வந்து சமீபித்து இறையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் சலாம் சொல்லி நீங்கள் உங்களின்
சரீரமானது வருந்த வேண்டாம். இந்த மகத்தாகிய பூமியின்கண் இன்றைய தினம் உங்களது இனத்தவர்களான
சத்துராதிகளின் துன்பத்தினால் அந்த நாயகனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் தேவர்களான மலாயிக்கத்து
மார்களில் பருப்பதங்களுக்கு இராஜாவானவரை உங்களது ஏவலுக்காக ஏவினா னென்று எடுத்துக் கூறினார்கள்.
2229.
இறும்பி னுக்கர சாகிய மலக்கும திடத்தி
னுறும்ப கைத்திர
ளெத்தனை யாகிலு மொடுக்கிக்
குறும்பி னைத்தவிர்த்
திடவரு குவரெனக் கூறிப்
புறம்ப ரந்தசெங்
கட்கடை யருளொடும் போனார்.
22
(இ-ள்) அன்றியும்,
பருப்பதங்களுக்கு இராஜா வாகிய மலக்கானவர் உங்களிடத்தில் பொருந்திய பகைக்கூட்டங்க
|