பக்கம் எண் :

சீறாப்புராணம்

827


வஞ

முதற்பாகம்
 

2223. வஞ்ச கக்கொடி யவனுரைத் திடுமொழி வழியே

     பஞ்ச பாதகர் நடந்தரும் பாதையைக் குறுகிக்

     கஞ்ச மென்பத முகம்மதைக் கடிதினில் வளைந்திட்

     டஞ்ச லாதுகற் குணிலெடுத் தெறிந்துநின் றடர்ந்தார்.

16

      (இ-ள்) வஞ்சகத்தினது கொடுமையை யுடையவனான அந்த அப்துயாலி லென்பவன் அவ்வாறு கூறும் வார்த்தைகளின் மார்க்கமே பஞ்ச பாதகத்தை யுடையவ ராகிய அச் சிறுவர்கள் நடந்து சென்று அருமையான அவ்வழியைக் குறுகித் தாமரை மலர்போலும் மெல்லிய பாதங்களையுடைய நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை விரைவிற் சூழ்ந்து பயப்படாது கவண் கல்லினால் வீசி நின்று அடர்ந்தார்கள்.

 

2224. கல்லி னாலுரஞ் சிரங்கரங் கான்முகங் காணா

     தெல்ல வன்கதிர் பொழிந்தெனப் பலதொடுத் தெறிந்து

     பல்லி னாலித ழதுக்கியு முறுக்கியும் படர்ந்தார்

     சொல்லொ ணாப்பெரும் பாதகம் விளைத்திடுஞ் சூமர்.

17

      (இ-ள்) சொல்ல முடியாத பெரிய பாவத் தொழிலைச் செய்யும் சூமராகிய அந்தச் சிறுவர்கள் கற்களினால் மார்பு, தலை, கை, கால், முக மிவைகளைக் காணாது சூரியனானவன் தனது கிரணங்களைச் சொரிந்தாற் போல பலவற்றைத் தொடுத்து வீசிப் பற்களாற் றங்களின் அதரங்களை அதுக்கியும் கோபித்தும் சென்றார்கள்.

 

2225. இருமை யும்பத மிழந்தவர் செலச்சினந் தெறிந்து

     கருனு தாலிபு மட்டினுந் தொடர்ந்தவர் கலைந்தார்

     தருகை வள்ளனந் நபிமுகம் மதின்முழந் தாளி

     லொருகல் லேறுபட் டூறுபட் டுதிர்ந்தன வுதிரம்.

18

      (இ-ள்) இம்மை, மறுமை யென்னும் இருமையிலும் மோட்ச மிழந்தவர்களாகிய அந்தச் சிறுவர்கள் கொடையை அருளா நிற்கும் கைகளையுடைய வள்ளலான நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு நடக்கக் கோபித்துக் கற்களினால் வீசி கருனுதாலி பென்னுந் தல மட்டிலும் பின்பற்றிக் கலைவுற்றார்கள். அதனால் அவர்களுக்கு முழந்தாளில் ஒரு கல்லினது ஏறுபட்டுக் காய முண்டாய் இரத்தமானது துளித்தது.

 

2226. ஊறு பட்டதின் வருத்தமும் பசியினுள் ளுலைவு

     மாறு பட்டவர் தொடர்ந்ததி னடந்தமெய் மலைவும்

     பேறு பட்டமுந் தந்தவ னருளெனப் பெரிதின்

     றேறு பட்டவ ணிருந்தனர் திருநபி யிறசூல்.

19