முதற்பாகம்
ஜின்களீமான்கொண்ட
படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2255.
படர்ந்துவண்
டினந்தே னுண்டு செவ்வழி பாடுங் கஞ்சத்
தடந்திகழ்
கர்னுத ஆலி பென்னுமத் தலத்தை நீந்திக்
கடந்தனிற்
குபிரென் றோதுங் களிறட ரரியே றென்ன
நடந்துநன் னகுலா
வென்னுந் தலத்தினை நண்ணி னாரால்.
1
(இ-ள்)
வண்டினது கூட்டங்கள் படர்தலுற்று மதுவை யருந்திச் செவ்வழிப் பண்ணைப் பாடா நிற்கும் தாமரை
மலர்களின் வாவிகளானவை விளங்கப் பெற்ற கர்னுத ஆலிபென்னும் அந்த இடத்தை நாயகம் ஹபீபு
றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விட்டுக் கடந்து
குபிரென்று சொல்லும் யானைகளை அடருகின்ற ஆண் சிங்கத்தைப் போன்று காட்டில் நடந்து நன்மை
பொருந்திய நகுலாவென்னு மிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2256.
பொங்கிநின்
றமர ரியாரும் பொன்னடி பரவி யேத்து
மங்குலங் கவிகை
வள்ளன் முகம்மது நகுலாத் தன்னிற்
றங்கினர் பறவை
தத்தங் குடம்பையிற் சார வாவிப்
பங்கயங் குவியச்
செங்கே ழலரிமேற் பரவை சார்ந்தான்.
2
(இ-ள்)
தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களெல்லாவரும் அதிகரித்து நின்று பொன் போலுஞ் சரணங்களை
வணங்கித் துதிக்கும் அழகிய மேகக்குடையை யுடைய வள்ளலான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த நகுலாவென்னுந் தலத்திற் தங்கி இருந்தார்கள்.
பட்சிகள் தங்களின் கூடுகளிற் போயடையவும், தடாகங்களிலுள்ள தாமரை மலர்களானவை கூம்பவும்,
சிவந்த பிரகாசத்தைக் கொண்ட சூரியனானவன் மேல்பாற் சமுத்திரத்தின்கண் போய்ச்
சேர்ந்தான்.
2257.
அலரிமேற் கடலுட் புக்க வடரிருட் படலஞ் சீப்ப
நிலவுகொப்
பிளித்த தென்ன நீண்டமெய்ச் சோதி கால
நலனுறு நகுலா
வென்ன நாட்டிய தலத்தி னோர்பாற்
சலதரக் கவிகை
யோங்கத் தனித்தவ ணிருந்தா ரிப்பால்.
3
(இ-ள்)
சூரியனானவன் அவ்வாறு மேல்பாற் சமுத்திரத்தினகம் போய் நுழைய நெருங்கிய இருளாகிய படலத்தைச்
சீய்க்கும் வண்ணம் நிலவானது கொப்பளித்ததைப்
|