பக்கம் எண் :

சீறாப்புராணம்

839


முதற்பாகம்
 

போலும் நீண்ட திருமேனியினது பிரகாசமானது ஒளிரவும், நன்மை பொருந்திய நகுலாவென்னு நாட்டப்பட்ட அத் தலத்தினது ஒரு பக்கத்தில் மேகக் குடையானது ஓங்கும்படி ஏகமாய் அவ்விடத்தி லிருந்தார்கள். அதன்பின்னர்.

 

2258. அலைகடற் றிரைக்கு நாப்ப ணாளியா சனத்தில் வைகி

     யுலகெலாங் கொடுங்கோ லோச்சி யொருகுடை நிழலிற் றாங்கிப்

     பலகலை மருவ லார்க்குப் படிறெனும் படைந டாத்துந்

     தலைமையன் சிறுமை கீழ்மை தனைப்பெருமையதாய்க் கொண்டோன்.

4

      (இ-ள்) அலையா நிற்கும் அலைகளையுடைய சமுத்திரத்திற்கு மத்தியில் சிங்காசனத்தின்கண் தங்கி உலகங்க ளெல்லாவற்றினுங் கொடிய செங்கோல் செலுத்தி ஒப்பற்ற குடையினது நிழலினாற் றாங்கிப் பல நூல்களைப் பொருந்தாதவர்களுக்குப் பொய் யென்னுஞ் சேனையை நடத்தும் தலைமைத்தனத்தையுடையவன். சிறுமையையும் தாழ்மையையும் பெருமையாகக் கொண்டவன்.

 

2259. கொலையினுக் குரிய தந்தை கோளுயிர்த் துணைவன் மாறா

     நிலைகெடுங் கரவுக் கன்ப னிந்தனைக் குற்ற தம்பி

     யிலைபிழி மதுவுக் கீன்ற சேயினு மினிய னீண்ட

     வுலகினின் மாய மெல்லா மோருரு வெடுத்து நின்றோன்.

5

      (இ-ள்) அன்றியும், கொலைத் தொழிலுக்குச் சொந்தமாகிய பிதாவானவன். கோளுக்குப் பிராண சகோதரனானவன். நீங்காத நிலைமை கெட்ட களவுக்கு அன்பனானவன். நிந்தனைக்குப் பொருந்திய தம்பியானவன். இலையிற் பிழியா நிற்கும் கள்ளுக்குப் பெற்ற பிள்ளையிலும் இனிமையானவன். நீட்சியுற்ற இந்த வுலகத்தின் கண்ணுள்ள மாயங்க ளத்தனையினாலும் ஓர் வடிவத்தை எடுத்து நின்றவன்.

 

2260. எண்ணிறந் தனைய கால மிருந்திறை யேவன் மாறி

     விண்ணுல கிழந்து மெய்மை விதிமறை தனக்கு நாணி

     மண்ணிலத் திருந்து வாழு மானுட ரெவர்க்கும் வெய்ய

     தண்ணிய னிபுலீ சென்னுந் தனிப்பெரு நாமத் தானே.

6

      (இ-ள்) அன்றியும், கணக்கற்ற காலம் இருக்கப் பெற்று இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஏவற்றொழிலை மாறிச் சுவர்க்கலோகத்தை யிழந்து சத்தியத்தை விதிக்கா நிற்கும் வேதங்களுக்கு வெட்கமுற்று இந்தப் பூமியின்கண்ணிருந்து வாழும் மாந்தர்க ளியாவருக்கும் கொடிய தாழ்மையையுடைய இபுலீசென்று கூறும் ஒப்பற்ற பெரிய பெயரை யுடையவன்.