முதற்பாகம்
கேள்வியுற்றுத்
திரும்பியும் எங்களுக்குப் பொருந்திய களங்க மற்ற வாகனங்களுக்கு ஆகாரம் யாதென்று கேட்டன.
2291.
தேறிய மறையின்
றீஞ்சொல் தீனிலைக் குரிய தூயோ
ரேறுவா கனந்தின்
றற்ற தெவையுள வவைக ளெல்லா
மாறுபா டன்றி
நுங்கள் வாகனத் துணவே யென்னக்
கூறினர்
பிணைக்கி யானே பிணையெனக் கூறுங் கொண்டல்.
37
(இ-ள்)
அவ்வாறு கேட்க, பெண்மானுக்கு நான் பிணையென்று சொல்லிய மேகத்தை நிகர்த்தவர்களான நாயகம்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தேறிய புறுக்கானுல் அலீமென்னும்
வேதத்தினது இனிய வார்த்தைகளைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்திற்குச் சொந்த
மாகிய பரிசுத்தத்தை யுடையோர்கள் ஏறா நின்ற வாகனங்கள் புசித்து அற்றது எவையுள்ளன?
அவைகளனைத்தும் பேதமன்றியுங்களது வாகனங்களின் ஆகாரமென்று கூறினார்கள்.
2292.
விரிதரு மமுதச்
செவ்வாய் திறந்திவை விளம்பக் கேட்டுத்
திருமுகத்
தெதிர்ந்த பன்னீ ராயிரஞ் சின்க டங்கள்
சிரமடி மலரிற்
சேர்த்தித் தீனவர் தமையும் வாழ்த்திப்
பரிவொடு
மகிழ்ந்து தத்தந் திசையினிற் படர்ந்த வன்றே.
38
(இ-ள்)
விரிந்த அமுதத்தைக் கொண்ட சிவந்த வாயைத் திறந்து இவைகளைக் கூறக் காதுகளினாற்
கேள்வியுற்றுத் தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தின்கண் எதிர்ந்து அந்தப் பன்னீராயிரம்
ஜின்களும் தங்களின் தலைகளை நாயகம் நபி முகம்மது றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
பாதங்களாகிய தாமரைமலரில் பொருந்தித் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களையும்
புகழ்ந்து அன்போடும் மகிழ்ச்சி யடைந்து தங்கள் தங்கள் திக்குகளில் சென்றன.
2293.
பரவையும்
விசும்பும் பாரும் படர்ந்திருள் செறிந்து தோன்று
மிரவினிற்
றிரண்ட சின்க ளினத்தினை யீமான் கொள்வித்
தரியட லேற
தென்ன வழகொளி விரித்துக் காட்ட
மருமலர்க் கரிய
கூந்தன் மயிலுறை மனையின் வந்தார்.
39
(இ-ள்)
அவ்வாறு செல்லவே நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
சமுத்திரமும் ஆகாயமும் பூமியும் இருளானது பரவி நெருக்கமுற்று விளங்கா நிற்கும் இராக்காலத்தில்
ஜின்களானவை கூடிய கூட்டத்தை ஈமான் கொள்ளும்படி செய்வித்து வலிமையைக் கொண்ட ஆண்
|