முதற்பாகம்
2288.
கலைநெறி பகரும்
வள்ளல் கானகத் தருவை நோக்கி
யுலைவிலா துனது
தானத் துறைகென வுரைப்பத் தீனி
னலனுறு மபுல்கா
சீம்தம் னல்லிசை திசைக டோறு
நிலைபெற நின்ற
தென்ன நெறிச்சென்று நின்ற தன்றே.
34
(இ-ள்)
அவ்வாறு நிற்கவே வேதத்தினது ஒழுங்குகளைக் கூறி நிற்கும் வள்ளலாகிய நமது நாயகம் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் காட்டின் கண்ணுள்ள அந்த மரத்தைப் பார்த்து
உலை வில்லாது உனது தலத்தில் போய்த் தங்குவாயாக வென்று சொல்லத் தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தினது நலத்தைப் பொருந்திய இந் நூலினது உதார நாயகனான அபுல்காசீ மென்பவனின் நல்ல
கீர்த்தியானது திக்குகள் தோறும் நிலைபெறும் வண்ணம் நின்றதைப் போலப் பாதையின் கண்
போய் நின்றது.
2289.
கணத்தொடுஞ்
சின்கள் வள்ளல் கமலமென் முகத்தை நோக்கி
யிணைத்தநன்
னெறியி னின்றோ மின்றுதொட் டினிமே லுங்கட்
குணத்தக்க வுணவீ
தின்ன தெனவெடுத் துரையு மென்னப்
பணித்துவாய்
புதைத்து நின்று பண்புறப் பகர்ந்த வன்றே.
35
(இ-ள்)
அப்போது அந்த ஜின்கள் தங்கள் கூட்டத்தோடும் வள்ளலாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தாமரை மலர் போலும் மெல்லிய முகத்தைப் பார்த்து
நாங்கள் சேர்க்கப்பட்ட நல்ல சன்மார்க்கத்தில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல்
உங்களுக்கு அருந்தத் தக்க ஆகாரமிது வென்று எடுத்துச் சொல்லுங்களென்று வணங்கி வாய் பொத்தி
நின்று பண்புறக் கூறின.
2290.
பறவையில்
விலங்கி லுள்ள படைப்பினிற் றக்கு பீரி
லிறையவன்
விதித்த வண்ணத் திறந்ததென் பவையு நுங்கட்
குறைபசிக்
குணவென் றன்பா யோதினர் கேட்டு மீட்டு
மறுவற வெங்கட்
குற்ற வாகனத் துணவே தென்ற.
36
(இ-ள்) அந்த
ஜின்கள் அவ்வாறு கூற நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
பட்சிகளிலும் மிருகங்களிலு முள்ள சிருட்டிகளில் தக்குபீறில் இறைவனான ஹக்கு சுபுகானகுவத்த
ஆலாவானவன் கற்பித்தபடி மரித்த எலும்புகளாகிய அவைகளும் உங்களுக்குத் தங்கிய பசிக்கு
ஆகாரமென்று அன்பாய்க் கூறினார்கள். அதைக் காதுகளினாற்
|