முதற்பாகம்
மற்ற பக்கத்தில்
எறிதல் யாவர்களுக்கும் கடமை யென்று பொருந்தும்படி கூறினார்கள்.
2297.
பூமணம் பொருந்தக் காட்டும் புதுமைகண் டரிய சின்க
டாமதி யாது கூடித்
தளத்தொடுந் திரண்டு வந்தீ
மான்மனம்
பொருந்திற் றென்ற வார்த்தையிற் புளகங் கொண்டு
தேமலர்ப்
புயத்தார் போற்றத் திருநபி யிருந்தா ரிப்பால்.
43
(இ-ள்)
புஷ்பத்தினது பரிமளத்தைப் பொருந்தும்படி காட்டும் ஆச்சரியத்தைப் பார்த்து அரிய ஜின்கள்
தாமதியாது திரண்டு தங்களின் தளத்தோடுங் கூடி வந்து ஈமானை இருதயத்தின்கண் பொருந்திற்றென்று
சொல்லிய வார்த்தையினால் புளகமுற்று வாசனையைக் கொண்ட மலர்மாலை யணிந்த தோள்களை
யுடையவர்களான சஹாபாக்கள் துதிக்கத் தெய்வீகந் தங்கிய நமது நாயகம் எம்மறைக்கும் தாயகம்
நபிகட் பெருமானார் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் இருந்தார்கள் இதன் பின்னர்.
|