முதற்பாகம்
யங்கமு மனமும் வெருவரத் திடுக்கிட்
டலம்வர வெழுந்துவாய் குழறிப்
பங்கமுற் றயர்ந்திட் டடிக்கடி நோக்கி
பதங்கர நனிநடு நடுங்கி.
25
(இ-ள்) தானவ
னாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் புலியான ஆண் சிங்கத்தை நிகர்த்த அலி றலியல்லாகு அன்கு
அவர்கள் தெய்வீகந் தங்கிய கையில் சிவந்த கிரணங்களையுடைய வாளாயுதமானது கிடந்து பிரகாசிக்கவும்,
தோளின் கண்ணுறைந்த குங்குமப் புஷ்பத்தினாலான மாலைகள் புரண்டு அசையவும் வருவதை அந்தக்
காம்மா வென்பவன் பார்த்துச் சரீரமும் மனமும் அச்சத்தைக் கொள்ளத் திடுக்க முற்றுச் சஞ்சலம்
வரும் வண்ணம் எழும்பி வாய் குழறிப் பங்க மடைந்து சோர்ந்து அடிக்கடிப் பார்த்துக் காலும் கையும்
மிகவும் நடுநடுக்கங் கொண்டு.
2323.
மன்னர்மன் னவரை முகம்மதை நோக்கி
வாய்வெளி றிடவிழி சுழல
வெந்நிடை யொளித்திட் டொதுங்குற வொடுங்கி
விறற்புலி யலிதமைத் தூண்டி
யென்னையுங் கெடுத்தென் ரைசையு மழித்திட்
டித்தனைக் கியற்றிய சீமா
னன்னவ னலது வேறிலை யினம்வந்
தடுக்கிலென் விளையுமோ வறியேன்.
26
(இ-ள்) இராஜாதி
ராஜரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து
வாயானது வெளிறவும், கண்கள் சுழலவும், ஒதுங்கும் வண்ணம் முதுகினிடத்து ஒளித்து ஒடுக்க முற்று விஜயத்தைக்
கொண்ட புலியாகிய அலிறலியல்லாகு அன்கு அவர்களைச் சுட்டிக் காட்டி என்னையுங் கெடுத்து எனது இராஜாங்கத்தையும்
அழித்து இவ்வளவு துன்பப் படுவதற்குச் செய்த சீமான் அதோ? வரப்பட்டவ னல்லாது வேறே
யொருவருமில்லர். இன்னம் அவன் இங்கு வந்து சமீபித்தால் யாது விளையுமோ? அதை யானறிகிலேன்.
2324.
மெய்ப்பொருண் மறைக்கு நாயகப் பொருளே
விண்ணவ ருயிரினுக் குயிரே
யிப்புவி யிடத்தி லடைக்கல மடியே
னெனைப்பிணித் தடல்வலி யெறிந்த
துப்பின னீதோ வடுத்தனன் சற்றே
தூரநின் றிடவருள் பணித்தென்
கைப்பட நுந்தங் கரங்கொடுத் துயிரைக்
காப்பது கடனெனக் கரைந்தான்.
27
|