பக்கம் எண் :

சீறாப்புராணம்

875


இரண்டாம் பாகம்
 

2351. மக்கமா நகரில் வாழு முகம்மது பாதம் போற்றிப்

     பக்கலி லிருந்தன் பாகப் பரிவொடுங் கலிமா வோதி
     மிக்கதீன் பெருகிச் செல்வம் விளங்கிட யீமான் கொண்டு

     தக்கநல் வணக்கத் துற்ற சறுத்தினைக் கருத்துட் கொண்டார்.

6

      (இ-ள்) அவ்விதந் தெரிசித்த அவர்கள் திரு மக்கமா நகரத்தில் வாழா நிற்கும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சரணங்களைத் துதித்து அன்போடும் அருகிலுட்கார்ந்து மேன்மையை யுடைய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கம் அதிகரித்து செல்வமானது விளங்கும் வண்ணம் இனிமையுடன் ழுலாயிலாஹ இல்லல்லாஹீ முகம்மதுர்ற சூலுல்லாஹிழு என்னுங் கலிமாவை நாவினாற் சொல்லி ஈமான் கொண்டு தகுதியான நல்ல வணக்கம் சொல்லி ஈமான் கொண்டு தகுதியான நல்ல வணக்கத்திற்குப் பொருத்தமாகிய முறைமைகளைச் சிந்தையினிடத்துக் கொண்டார்கள்.

 

2352. நல்வழிக் குரிய ராகி நடுக்கமொன் றின்றித் தங்கள்

     கல்பினிற் கசடு நீத்துக் கரகம லங்க ணீட்டிச்

     செல்வநந் நயினார் செவ்வித் திருக்கரத் திடத்திற் சேர்த்திப்

     பல்விதம் வரினும் வார்த்தைப் படிதவ றிலமியா மென்றார்.

7

      (இ-ள்) அவ்வாறு நன்மை பொருந்திய சன்மார்க்கத்திற்குரியோர்களாகி யாதொரு பயமுமின்றித் தங்களது சிந்தையின் கண்ணுள்ள குற்றங்களை யொழித்துக் கைகளாகிய தாமரை மலர்களை நீட்டிச் செல்வத்தை யுடைய நமது நயினார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் தெய்வீகந் தங்கிய அழகிய கைகளினிடத்திற் சேர்த்து நாங்கள் இவ்வுலகத்தின்கண் பலவித இடுக்கண்கள் வந்தாலும் சொன்ன வார்த்தைகளைத் தவற மாட்டோமென்று சொன்னார்கள்.

 

2353. வெற்றிவாண் முகம்ம துள்ளம் வேண்டிய வார்த்தைப் பாடு

     முற்றுற முடித்துத் தீனின் முறைமையிற் றலைவ ராகி

     நற்றவ முடையீர் மேலு நல்வழி சிதையா வண்ண

     முற்றொரு வரையின் றெங்க ளுடன்படுத் திடுக வென்றார்.

8

      (இ-ள்) அவ்விதஞ் சொல்லி விஜயத்திக் கொண்ட வாளாயுதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் மனமானது விரும்பப் பெற்ற வார்த்தைப்பாடுகளெல்லாவற்றையும் பொருந்தும்படி முடித்துக் கொடுத்துத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க முறைமைகளில் தலைமையர்களாய் நன்மை யுற்ற தவத்தை