இரண்டாம் பாகம்
யுடைய நபிகட்
பெருமானே! நல்ல சன்மார்க்கமானது மேலும் கெடாத வண்ணம் எங்களுடன் ஒருவரைச்
சேர்த்தனுப்புங்களென்று சொன்னார்கள்.
2354.
இதத்தநன் மொழிய தாய்ப்பன் னிருவரு முரைத்த மாற்ற
மதித்துமா
மறையிற் றேர்ந்த முசுயிபை வள்ளல் கூவி
விதித்தநன்
னெறிவ ழாமற் குறானையும் விரித்துக் காட்டிப்
பதித்தலத்
திவர்க்குற் றோர்க்கும் நல்வழிப் படுத்து மென்றார்.
9
(இ-ள்)
வள்ளலாகிய நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவ்வாறு
இதத்தினையுடைய நல்வார்த்தைகளாகச் சொன்ன சமாச்சாரத்தைத் தங்களின் மனதின்கண் மதித்து
மகத்தான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தில் தேர்ச்சியுற்ற முசுஇபென்பவரை அழைத்து
உலகத்தின்கண் இவர்களுக்கும் இவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் விதிக்கப்பட்ட நல்ல
சன்மார்க்கமானது தவறாமல் குர்ஆனையும் விளக்கிக் காட்டி நல்வழியி லுட்படுத்து மென்று
சொன்னார்கள்.
2355.
வடிவுறை அசுஅதோடு
முசுயிபு மகிழ்விற் காம
ரடலரி யிறசு
லுல்லா வம்புயப் பதத்திற் றாழ்ந்து
படரொளி குலவு
மாடப் பதிகடந் தடவி நீந்திப்
புடைவளம் பலவு
நோக்கிப் போயினார் மதீன மூதூர்.
10
(இ-ள்)
அவ்விதஞ் சொல்ல, அழகு தங்கிய அசுஅ தென்பவரோடு முசுயி பென்பவரும் சந்தோஷத்துடன் அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவினது றசூலான அழகிய வீரத்தைக் கொண்ட சிங்கமாகிய நாயகம் நபி முகம்மது
முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தாமரை மலரை நிகர்த்த பாதங்களிற் பணிந்து
விரிந்த பிரகாசமானது ஒளிரா நிற்கும் மாடங்களை யுடைய அந்த மக்கமா நகரத்தைத் தாண்டிக்
காடுகளைக் கடந்து பக்கத்திலுள்ள செல்வங்கள் பலவற்றையும் பார்த்துக் கொண்டு பழமையினையுடைய
பட்டண மாகிய மதீனமா நகரத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.
2356.
கோட்டுடை
மலரின் மன்றல் குலவிய மதீனம் புக்கித்
தோட்டுணை
அசுஅதோடு முசுயிபு தோன்ற றானும்
பாட்டளி முரலுந்
தாமத் தலைவர்பன் னிருவர் சூழ
வேட்டமுற்
றாதிதூதர் விரித்ததீன் விளக்கஞ் செய்தார்.
11
(இ-ள்)
துணையாகிய இரு புயங்களையுடைய அசுஅ தென்பவருடன் முசுயிபென்னும் மன்னவரும் கொம்புகளையுடைய
புஷ்பங்களின் தேனானது உலாவப் பெற்ற திரு மதீனமா நகரத்தில் அவ்வாறு போய்ச் சேர்ந்து
வண்டுகள் கீதங்களைப் பாடா
|