பக்கம் எண் :

சீறாப்புராணம்

898


இரண்டாம் பாகம்
 

மில்லாமல் யாவருக்கும் அவர்களின் எண்ணங்களை ஓரெண்ணமாக்கி அவர்களின் செவியின் கண் சேரும் வண்ணஞ் செய்து எனது வார்த்தைகளைப் பொருந்தச் செய்தல் வேண்டும்.

 

     2421. எனக்குயிர்க் குறுதுணை யீன்ற மாமணி

         மனக்கலை யறிவினின் மதித்தி டாப்பொருள்

         கனக்குமெய்க் காரணக் கடலிக் காசினி

         தனக்கொரு திலதமொத் தனைய தன்மையார்.

11

      (இ-ள்) எனக்குப் பிராணனைப் போலும் பொருந்திய சகோதரரான அப்துல்லா வென்பவர் பெற்ற மகத் தாகிய இரத்தினமும் சாத்திர ஞானத்தில் இதயத்தினால் கணிக்க முடியாத வத்துவும் அதிகரிக்கும் உண்மையை யுடைய காரணத்தினது சமுத்திரமும் இப்பூலோகத்திற்கு ஒப்பற்ற சுட்டியை நிகர்த்த வெற்றியை யுடையவரு மான.

 

     2422. பெரும்புகழ் முகம்மது பிறந்த நாட்டொடுத்

          தரும்புவி யிடத்திற்றீங் கடுத்தி டாவகை

          வரம்பெறு மவரவர் வணக்கந் தன்னொடு

          மிரும்பெருங் குலமெலா மிறைஞ்சி நின்றதே.

12

      (இ-ள்) பெரிய கீர்த்தியை யுடைய நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அரிய இவ்வுலகத்தின் கண் அவதரித்த நாள் முதல் துன்பங்கள் நெருங்காத விதத்தில் வரங்களைப் பெற்றுக் கொள்ளும் அன்னவர்களின் இறைஞ்சுதலோடு மிகவும் பெரிய எங்களது கூட்ட மனைத்தும் வணங்கி நின்றன.

 

     2423. கண்ணுறு மணியெனக் காமுற் றியாவரு

          மெண்ணருஞ் சிறப்பொடு மினிது கூர்ந்தன

          மண்ணலைக் குறித்தும ரடுத்துத் தீனெனும்

          வண்ணமொத் தொழுகிநல் வழிப்பட் டாரரோ.

13

      (இ-ள்) யாங்க ளியாவரும் அண்ண லாகிய அந்நபிகட்பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நயனத்தின் கண் பொருந்திய மணியைப் போலும் நினைத்தற் கரிய சிறப்புடன் இனிமையோடு நேசித்து மகிழ் வடைந்தோம். நும்மவர்களும் மனதின்கண் சிந்தித்து நெருங்கித் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கச் செயலிற் பொருந்தி நடந்து நல்வழியி லாயினார்கள்.

 

     2424. அன்றுதொட் டும்மிடத் தடுத்துத் தீனிலைக்

         கொன்றிய முதியவ ரொழுங்குஞ் செய்கையு

         நன்றியும் வணக்கமு நயந்து நாட்குநாள்

         வென்றிகொண் முகம்மது விருப்புற் றாரரோ.

14