பக்கம் எண் :

சீறாப்புராணம்

911


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவர்கள் அவ்விதங் கூற, வாசனையானது நெருங்கப் பெற்ற தேனினது புட்பங்களாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இப்போது நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைக் குற்ற மில்லாது எக்காலமும் பொருந்தும் வண்ணம் முடித்து நிற்கும் அரசர்களுக்கு யாவற்றிற்கு முதன்மையான ஜல்லஜலாலகு வத்த ஆலாவானவன் தனது காருண்ணியத்தையும் பூரணப்பட்ட விஜயத்தையும் மோட்ச லோகத்தையுங் கொடுப்பா னென்று சொன்னார்கள்.

 

2465. கனைக்கும் வெண்டிரைக் கடற்புவி புகழ்அபுல் காசிம்

     நினைக்குஞ் சிந்தையிற் பொருந்துற நிறைந்தநன் னபியைக்

     குனிக்கும் வார்சிலைக் கரத்தொடு பணிந்திரு குலத்தோர்

     தனிக்க டந்தரு களிறெனச் சார்பினிற் சார்ந்தார்.

55

      (இ-ள்) அவ்விதஞ் சொல்ல, கசுறஜூ, அவுசென்று கூறும் அந்த இரண்டு கிளையினர்களும் ஒலிக்கா நிற்கும் வெள்ளிய அலைகளினது சமுத்திரத்தை யுடைய இந்தப் பூலோகமானது துதிக்கின்ற இந் நூலினது கொடை நாயகனான அபுல் காசீ மென்பவன் சிந்திக்கு மிதயத்தினிடத்துப் பொருந்தும் வண்ணம் பூரணப்பட்ட நன்மை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பீல் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை வளைக்குகின்ற நீண்ட கோதண்டத்தைத் தாங்கிய கைகளோடு தாழ்ந்து ஒப்பற்ற மதத்தைப் பொழியா நிற்கும் யானைகளைப் போலும் அவரவர்களி னிடத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.