பக்கம் எண் :

சீறாப்புராணம்

935


இரண்டாம் பாகம்
 

ளென்றும் யாவற்றிற்கும் இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவால் நேய முற்றிறங்கிய ஆயத் தாகிய வேத வசனத்தை எடுத்துக் கூறி அழகை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அளவில்லாது துதித்து ஏனையோர்கள் தங்களை யறியாத விதத்தில் ஓர் நொடி நேரத்தில் இப் பூலோகத்தை விடுத்துப் பிரகாசத்தை எவ்விடத்தும் பரவும் வண்ணஞ் செய்து வெற்றியைப் பெற்ற அமராதிப ரான அந்த ஜபுறயீ லலைகிஸ்ஸலா மவர்கள் வான லோகத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2529. மங்குலிற் சுழலுந் துவசநீண் மாட

         மதீனமா நகரினி லுறைந்து

     வெங்குபிர் கடிந்து பீசபீல் செய்ய

         மேலவன் விதித்தன னென்ன

     விங்கிவ ருரைத்த மாற்றமு மனத்தி

         னெண்ணிய நினைவுமொன் றாச்சென்

     றங்கமு மகமு முவகையிற் குளிப்ப

         அகுமதி யாத்திரைக் கியைந்தார்.

64

      (இ-ள்) அகம தென்னும் திரு நாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மேகத்தினிடத்துச் சுழலா நிற்கும் கொடிகளினது உயர்ந்த உப்பரிகைகளையுடைய திரு மதீனமா நகரத்தின் கண் அவ்வாறு தங்கியிருந்து கொடிய காபிர்களை வெட்டி ழுபீசபீல்ழு என்னும் யுத்தஞ் செய்யும் வண்ணம் யாவற்றிலும் மேன்மையை யுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் கட்டளை செய்தானென்று இந்த ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்கள் கூறிய வார்த்தைகளுந் தாங்களிதயத்தின் கண் சிந்தித்த சிந்தனையும் ஒன்றாகப் போய்த் தங்களின் தேகமும் மனமும் களிப் பென்னுஞ் சமுத்திரத்திற் குளிக்கும்படி அத் திரு மதீனமா நகரத்திற்குச் செல்லும் பிரயாணத்திற் குடன்பட்டார்கள்.

 

2530. தருமுகம் மதுநம் மிறையவன் றூதாய்

          நபியெனும் பட்டமே தரித்து

     வருமுறை பதினான் காண்டினின் மாசத்

          தொகையினில் றபீவுலவ் வலினிற்

     றெரிதருந் தேதி யைந்தினிற் றிங்க

          ளிரவினிற் சிறப்பொடு மதீனாப்

     பெருநகர்க் கேக விருந்தன ரிஃது

          பிறந்தது காபிர்க டமக்கே.

65