பக்கம் எண் :

சீறாப்புராணம்

934


இரண்டாம் பாகம்
 

வரத்தைப் பொருந்திய தேவர்ளுக் கதிபதி யாகிய ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்கள் விரிந்த பெரிய வான லோகத்தின் கண்ணின்று மிறங்கிக் கூறுதற் கருமையான பிரகாசத்தை யுடைய தங்களின் சிறகுகள் பலவற்றையும் ஒடுக்கிக் கொண்டு நன்மை பொருந்திய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து கிருபையோடும் சலாஞ் சொல்லிச் சொல்லுவார்கள்.

 

2527. மேலவன் றூதை முகம்மதை விளித்து

          வினைக்கொடுங் காபிர்க டிரண்டு

     கோலிய பழியை முடித்திடத் துணிந்த

          குறிப்பெலாம் படிப்படி யுரைத்து

     மாலமர் புதுமை மக்கமா நகர்விட்

          டணிதிகழ் மதீனமா நகரிற்

     சீலமுற் றிருந்து நன்னெறி வழாது

          தீனிலை நிறுத்திடு மெனவும்.

62

      (இ-ள்) மேன்மையை யுடையவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலும் முகம்ம தென்னும் இயற் பெயருமுடையவர்களான நபிகட் பெருமானார்நபி காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கூப்பிட்டுத் துர்க்கிருத்தியங்களை யுடைய கொடிய அந்தக் காபிர்கள் ஒன்று சேர்ந்து சூழா நிற்கும் பெரிய பழியை நிறைவேற்ற மனத்தி னிடத்தில் திடங் கொண்ட கருத்துகளெல்லாவற்றையும் ஒழுங்கொழுங்காகச் சொல்லி நீங்கள் பெருமையை யுடையோர்களின் அற்புதத்தைக் கொண்ட இந்தத் திரு மக்கமா நகரத்தை விடுத்து அலங்காரங்களானவை பிரகாசியா நிற்கும் திரு மதீனமா நகரத்தின் கண் சென்று அறிவுட னிருந்து நன்மை பொருந்திய சன்மார்க்கத்தினது ஒழுங்குகளானவை தவறாமல் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது நிலைமையை நிலை நிற்கச் செய்யுங்களென்றும்.

 

2528. கட்டுரைக் கடங்காக் காபிர்தம் மாவி

          களைந்திடு மென்னவு மிறையோ

     னிட்டமுற் றாயத் திறங்கிய வசன

          மெடுத்துரைத் தெழின்முகம் மதுவை

     மட்டறப் புகழ்ந்து பிறரவ ரறியா

          வண்ணத்தி னொருநொடிப் பொழுதின்

     விட்டொளி பரப்பிக் ககனிடைப் படர்ந்தார்

          விறல்பெறும் விண்ணவர்க் கரசர்.

63

      (இ-ள்) உண்மை வார்த்தைக் கமையாத காபிர்களினது பிராணனை அவர்களின் சரீரத்தில் நின்றும் ஒழித்து விடுங்க