பக்கம் எண் :

சீறாப்புராணம்

943


இரண்டாம் பாகம்
 

யென்று புகலா நிற்கும் கன்னிப் பருவத்தினது மாதை இவ் வுலகின் கண் பெற்ற வாசனை பொருந்திய புஷ்ப மாலையைத் தரித்த திண்ணிய தோள்களை யுடைய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டினது தலை வாயலிற் போய்ச் சேர்ந்து விரைவுடன் ஓர் வார்த்தையானது தோற்ற மாகும் வண்ணம் கூறி அவர்களைக் கூப்பிட்டார்கள்.

 

2545. மறுவிலா வசன முக்கமதின் றொனியீ

          தெனமனத் தினிற்குறித் தெழுந்து

     நிறைதரு மிருளி னொருதர மெனினு

          நினைத்திவ ணடைந்தவ ரலரின்

     றிறையவ னருளா லென்னினை வதனா

          லடைந்தன ரோவென வெண்ணிக்

     கறைகெழும் வடிவேல் வலக்கர னேந்திக்

          கடைத்தலை யடுத்தனர் கடிதின்.

80

      (இ-ள்) அவ்வாறு கூப்பிட, அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் குற்ற மற்ற வார்த்தையினது சத்த மாகிய இஃது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சத்த மென்று தங்களி னிருதயத்தின் கண் மதித்து எழும்பி நிறைந்த இவ்வித அந்தகாரத்தில் ஒரு தடவை யாயினும் இவ் விடத்தைச் சிந்தித்து வந்தவர்க ளல்லர். இன்றையத் தினம் யாவற்றிற்கும் இறைவ னான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் காருண்ணியத்தினால் யாது சிந்தனை யுடன் இங்கு வந்து சேர்ந்தார்களோ? தெரிய வில்லையே யென்று கருதி இரத்தக் கறையானது பிரகாசியா நிற்கும் கூரிய வேலாயுதத்தை வலது கையிற்றாங்கிக் கொண்டு விரைவிற் றலை வாயலில் வந்து சேர்ந்தார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

2546. உறுப்பொன் றுறையாப் பெருந்தசையை

          யொளிரும் புவன மடந்தையரின்

     சிறப்புற் றிருப்பச் செய்தவிற

          சூலே வரிசை நயினாரே

     யறப்பொங் கிருளிற் றனித்திவணி

          னடைந்த வரலா றென்செவியிற்

     பிறப்ப வுரைப்ப வேண்டுமெனப்

          பிரிய முடனின் றினிதுரைத்தார்.

81

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்து அவர்கள் அவயவங்களொன்றும் இருக்கப் பெறாத பெரிய தசைக் கட்டியை ஹபீ