பக்கம் எண் :

சீறாப்புராணம்

944


இரண்டாம் பாகம்
 

பரசனினது வேண்டு கோளுக்காகப் பிரகாசியா நிற்கும் சொர்க்க லோகத்தினது தெய்வப் பெண்களின் சிறப்பானது பொருந்தியிருக்கும் வண்ணம் செய்த றசூ லானவர்களே! சிறப்புத் தங்கிய நயினா ராகிய நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே! முழவது மோங்கா நிற்கும் இந்த இருட் காலத்தில் நீங்கள் ஏகமாய் இவ் விடத்தில் வந்து சேர்ந்த வரலாற்றை எனது காதுகளுக்குத் தோற்ற மாகும் வண்ணம் சொல்ல வேண்டு மென்று அன்புட னின்று இனிமை யாகச் சொல்லிக் கேட்டார்கள்.

 

2547. உரைக்கு முறுதி மொழிகள்சில

          துளது மனையிற் பிறரவர்க

     ளிருக்கி லகற்று மெனவிறசூ

          லிசைப்ப விவணி னயலவர்கள்

     வருக்க மிலையிங் கெழுகவென

          மனையிற் கொடுபோய்த் தவிசின்மலர்

     விரிக்கு மணிப்பஞ் சணையிருத்தி

          வெற்றி யபூபக் கருமிருந்தார்.

82

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு கேட்க, றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நும் மிடத்தில் கூறா நிற்கும் உறுதி வார்த்தைகள் சிலதுள்ளது. நுமது வீட்டின் கண் அன்னியர்களிருந்தால் அவர்களை வீட்டை விட்டு மகன்று போகும் வண்ணஞ் செய்யு மென்று சொல்ல, இவ் விடத்தில் அயலார்களி னின மொன்று மில்லை. இங்கு தாங்கள் எழுந் தருளுங்க ளென்று சொல்லி வீட்டின் கண் கூட்டிக் கொண்டு போய் ஓ ராசனத்தில் புஷ்பங்களை விரித்த இரத்தினங்க ளழுத்திய பஞ்சனைகயின் மீது இருக்கும்படி செய்து விஜயத்தை யுடைய அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களு மிருந்தார்கள்.

 

2548. இற்றை யிரவி னியாத்திரையென்

          றிபுலீ சறிந்து காபிருடன்

     சொற்ற துணிவு மருவார்கள்

          சூழ்ந்து மனையை வளைந்ததுவு

     முற்ற துணைவா னவர்க்கரச

          ருரையின் படியாற் பூழ்தியெடுத்

     தெற்றி யெறிந்த வரவுமெடுத்

          திசைத்தார் மரவ மலர்த்தாரார்.

83

      (இ-ள்) அவ்வித மிருக்க, குங்குமப் புஷ்பத்தினா லான மாலையை யணிந்த நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இபுலீசு