பக்கம் எண் :

சீறாப்புராணம்

945


இரண்டாம் பாகம்
 

லகுனத் துல்லா வென்பவன் யான் இன்றைய விராத்திரியில் திரு மதீனமா நகரத்திற்க்குப் பிரயாணித்துச் செல்லப் போகிறே னென்றுணர்ந்து காபிர்களோடு சொல்லிய துணிகரத்தையும் அந்தக் காபிர்களாகிய சத்துராதிகள் தங்களின் வீட்டை வளைந்து சூழ்ந்ததையும் தங்களுக்குத் துணையாகப் பொருந்திய தேவர்களுக்கெல்லாம் அதிபதியான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்களினது வார்த்தைகளின் பிரகாரம் மட் புழுதியைக் கையினா லெடுத்து வீசி எறிந்து விட்டு வந்த தங்களின் வரவையும் எடுத்துச் சொன்னார்கள்.

 

2549. கோதுங் கதவெங் குபிர்க்குலத்தைக்

          குறைப்ப மதீன மாநகரிற்

     போது மெனுஞ்சொற் கேட்டுணர்ந்து

          புதியோன் றூதே யினியிவணிற்

     றீது விளையுந்த தரிப்பதல

          செல்வ தறனே யிமைப்பிற்றறு

     காதி யானு முடன்வருதல்

          சரத மெனக்கட் துரைத்தனரால்.

84

      (இ-ள்) குற்றத்தையுங் கோபத்தையு முடைய கொடிய காபிர்களினது கூட்டத்தைக் குறைக்கும் வண்ணம் அவ்வாறு திரு மதீனமா நகரத்திற்கு யாம் போகின்றோ மென்ற வார்த்தைகளை அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் காதுகளினாற் கேள்வியுற்றுணர்ந்து புதிய ஆலத்தை யுடைய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலான நபிகட் பெருமானே! இனி இங்கு தீவினைக ளுண்டாகும். தங்கி யிருப்பது நன்றல்லது, திரு மதீனமா நகரத்திற்குப் போவதுவே புண்ணியம், யானும் தவறி இமைகளை மூடி விழிக்கும் நேரமாயினும் இங்கு யிராது தங்களின் கூடவே வந்து விடுவது சத்திய மென்று உறுதியாய்க் கூறினார்கள்.

 

2550. உறுமெய்த் துணைவர் வருவனெனு

          முரையான் மிகவு மனமகிழ்ந்து

     செறுந ரறியா நெறிவிரைவிற்

          சேறல் வேண்டு மதற்கியையப்

     பெறுவா கனங்க ளிலையிருவர்

          தனித்துப் பெருங்கான் கடத்தனம

     திறைவன் பரமென் றிசைப்பஅபூ

          பக்க ரெடுத்தங் கியம்புவரால்.

85

      (இ-ள்) பொருந்திய உண்மைத் துணைவராகிய அவ் வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு கூட வருகிறேனென்று கூறிய வார்த்தைகளால் நாயகம் நபிகட்