| மகிழ்வதும் அவைகள் பொலிவு தோன்ற இறுமாந்து நின்று செம்மாந்து திரிவதும் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமன்றி காண கிடைக்காத ஒரு தெய்வீகம் கலந்த காட்சியாகும். 6. ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை ஜொலிக்க வீற்றிருக்கிறாள். 7. ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள் உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும் எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள் ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில். காதலியோ (மனைவியோ) நெஞ்சிருக்கும் தன் மணாளரைச் சுட்டுவிடும் என்று சூடான பதார்த்தங்களை உண்பதை மறுத்துக் கூறியதில்லையா. காதலுக்கு இலக்கணம் கண்ட நம் வள்ளுவப் பெருந்தகை கூட, நெஞ்சத்தார் காதல வராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து 1128
| (இனி நான் சூடான உணவை உண்ணமாட்டேன், என் நெஞ்சில் இருக்கும் அவரை அது சுட்டு விடுமே) |