பக்கம் எண் :

642

என்றார். என் செய்வாள் ராதை கொடுப்பது ருக்மணியாயிற்றே. வேறு
யாராகிலும் சூடான பொருளைக் கொடுத்திருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.
ருக்மணியே தருகின்றாளே என்று பருகினாள். சுட்டுவிட்டது கண்ணனை.
(உண்மையான அன்பிற் குரைத்த வள்ளுவர் வாக்குதான் பொய்க்குமாவென்ன)

     8. முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும்
கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு
இங்கிருந்துகொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த
ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.

     9. இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இது ஒரு
தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை
பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். நாம் முன்னே சொன்ன துவாரகா
சன்னதியிலிருந்து ஒகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து
விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு
சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர்.
இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு
தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும்
நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக்
காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி ஸேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி
நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்க தீர்த்தம் என்னும் மிகப்
பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.

     10. துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார்
3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான்
ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக
ஐதீஹம்.

     11. இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச்
சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி
பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள
பாலகா