பக்கம் எண் :

656

உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை
தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

     தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக
நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ
வினில் உரைக்க திரும்பலுற்றார்.

     என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர்
ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள்
இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம்
மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

     இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின்
தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய்
வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே
மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ
அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி
விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

     திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து
சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை
போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது
என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக்
கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.

     இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க
கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை