பக்கம் எண் :

657

ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து
பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

     அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச
ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில்
அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

     இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை
வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன்
குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன்
அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

     இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த
வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன
ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து
அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும்
போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு
பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே
சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க
கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

     தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின்
ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும்,
ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான்
புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்