பக்கம் எண் :

முதற் காண்டம்284

இன் இசையும், கோல் தேனும், இன் கனியும், கழைப் பாகும்,
பன் இசையும், பாகு ஊறும் பணி யாழும், மாங் குயிலும்,
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம்
                                 நாணி,
சொன்னவை கொண்டு, உணர்வு உரைப்பத் துணிந்து துவர்
                                 வாய் மலர்ந்தாள்:

     இனிய பாடலும், கொம்புத் தேனும், இனிய பழமும், கருப்பஞ் சாறும்,
பிறர் சொல்லும் புகழுரையும், வெல்லப் பாகுபோல் சுவை ஊறும்
வேலைப்பாடமைந்த யாழ் ஒலியும், மா மரத்துக் குயிலின் குரலும், அவை
போன்ற பிறவும் நாணுமாறு இனிமை வாய்ந்த அழகிய சொல்லை உடைய
நல்லவளாகிய மரியாள் முதலில் பேசுவதற்கு மனம் நாணி, பின் சூசை
மறைமுகமாகச் சொல்லியவற்றின் உட்பொருளை உணர்ந்துகொண்டு, தன்
உணர்வுகளை எடுத்துக்கூற ஒருவாறு துணிந்து, பவளம் போன்ற தன்
வாயைப் பேசத் திறந்தாள்:
 
11
மின்னையடை கடல்சூழ்ந்த வியனுலகம் புரந்தளிக்கு
மென்னையுடை யிறைவனலா லென்னுயிரை யினிதளிப்பப்
பின்னையடை வதோர்காவல் பேதைபெற வேண்டியதே
லுன்னையடை யானடைந்த வுவப்புரைப்பப் பாலதுவோ.
 
"மின்னே அடை கடல் சூழ்ந்த வியன் உலகம் பரந்து
                                     அளிக்கும்,
என்னை உடை இறைவன் அலால், என் உயிரை இனிது
                                     அளிப்பப்
பின்னை அடைவது ஓர் காவல் பேதை பெறவேண்டியதேல்
உன்னை அடை யான் அடைந்த உலப்பு உரைப்பப்
                                     பாலதுவோ?"

     "ஒளியை அடைந்த கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகத்தை ஆண்டு
காப்பவனும், என்னைத் தன் அடிமையாகக் கொண்டுள்ளவனுமாகிய
ஆண்டவன் மட்டுமே அல்லாமல், என் உயிரை இனிதே காக்கப் பின்னும்
அடையத் தக்கதொரு காவலைப் பேதையாகிய நான் பெறவே
வேண்டுமென்று இருக்குமாயின், உன்னை அடைந்துள்ள நான் அடைந்த
மகிழ்ச்சி வாயால் எடுத்துரைக்கும் தன்மையதோ?"