|
12
|
இவ்வாறொன்
றருள்புரிந்தே யினிதென்னைக் காத்திறையோன்
வவ்வாறொன் றிலயாரு மலிநன்றி யாவினுநா
னொவ்வாறொன் றிலநன்மை யுற்றதின்கைம் மாறாகச்
செவ்வாறென் றுளந்தேர்ந்த சிறிதுரைப்பே னோவென்றாள். |
| |
"இவ்வாறு ஒன்று
அருள் புரிந்தே இனிது என்னைக் காத்து
இறையோன்,
வவ்வு ஆறு ஒன்று இல யாரும், மலி நன்றி யாவினும், நான்
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக
செவ் ஆறு என்று உளம் தேர்ந்த சிறிது உரைப்பேனோ?" என்றாள்.
|
"ஆண்டவன்
இவ்வாறான துணை ஒன்றை அருளோடு தந்து இனிதாக
என்னைக் காத்து, யாரும் அடைவதற்கான வழியென்று ஒன்று இல்லாததும்,
நிறைந்த நன்மை யாவற்றினும் மேலாக, ஒப்பாகும் தன்மை என்று ஒன்றும்
இல்லாததுமான நன்மையை நான் அடைந்துள்ளேன். அதற்குப் பதில்
நன்றியாக அமையக் கூடிய செவ்விய வழியென்று என் உள்ளம் தெரிந்து
கொண்டவற்றைச் சிறிது சொல்லலாமோ?" என்றாள் மரியாள்:
|
13
|
கான்பயிலு
முறுக்கவிழ்செங் கமலந்தேன் துளித்ததெனா
மீன்பயிலு முடியாள்வாய் விரித்துரைத்த தீஞ்சொல்லாற்
றேன்பயிலு மலர்க்கொடியோன் செவியின்புண்
டறைதியெனாத்
தான்பயிலும் விடையாகித் தாழ்ந்திவளு
மொழிகின்றாள். |
| |
கான்
பயிலும் முறுக்கு அவிழ் செங் கமலம் தேன் துளித்தது
எனா,
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால்
தேன் பயிலும் மலர்க் கொடியோன் செவி இன்பு உண்டு,
'அறைதி' எனா,
தான் பயிலும் விடை ஆகி, தாழ்ந்து இவளும் மொழிகின்றாள்: |
|