பக்கம் எண் :

முதற் காண்டம்288

செந்தாமரை மொட்டின் மீது படவே, அவ்விதயம் மலர்ந்தது.
இதழ்களிடையே பொழியும் தேன் போலத் தன் பெரிய கண்ணினின்று
மகிழ்ச்சிக் கண்ணீர் சொரிந்து, பொங்கிய அன்பினால் சூசை பின் வருமாறு
கூறுகின்றான்.

                        17
புண்கனிந்த மருந்தொப்பப் பொங்குகரு ணாகரியே
விண்கனிந்த வொளியிமைக்கும் வெஞ்சுடரோன் விரித்துய்க்கு
மண்கனிந்த கதிரிருளை மாற்றுமென வினிதுரைத்த
பண்கனிந்த நின்சொல்லாற் பாசறைசெய் மருள்தீர்த்தாய்.
 
"புண் கனிந்த மருந்து ஒப்பப் பொங்கு கருணாகரியே,
விண் கனிந்த ஒளி இமைக்கும் வெஞ்சுடரோன் விரித்து உய்க்கும்
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என, இனிது உரைத்த
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய்."

     "புண்ணை ஆற்றப்பயன்படும் கனிந்த மருந்து போல உயிர்கள் மீது
பொங்கியெழும் கருணைக்கு இருப்பிடமானவளே, வானத்தில் மிகுந்த
ஒளியோடு விளங்கும் ஞாயிறு விரித்து இம் மண்ணுலகில் செலுத்தும்
நிறைந்த கதிர் இருளை மாற்றும் தன்மை போல, இனிதாகச் சொல்லிய இசை
போல் கனிந்த உன் சொல்லால் எனக்குத் துன்பம் தருகின்ற மயக்கத்தைத்
தீர்த்து வைத்தாய்."
 
                              18
திருவுளத்திற் குணராதொன் றீங்குண்டோ செய்மணத்தோ
டிருவுளத்திற் குணர்வொன்றா யிசைத்தமுறை நன்றறியக்
கருவுளத்திற் குணர்வுண்டோ கருத்துயர்ந்து தூண்டுநசை
வருவுளத்திற் கருணைவலோன் வாய்ந்ததயை வழங்குவனே.