|
15
|
நசையற்ற
மனமோங்கி நாயகற்கே பலியாக
வசையற்ற கன்னிமையின் வளங்காக்க நினைத்தேனித்
திசையுற்ற காவலனீ சேர்ந்ததனைக் காக்குதியென்
றிசையுற்ற மதிப்பதத்தா ளிணையடிதாழ்ந் திறைஞ்சினளே |
| |
"நசை அற்ற மனம்
ஓங்கி, நாயகற்கே பலியாக
வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன். இத்
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனைக் காக்குதி." என்று
இசை உற்ற மதிப் பதத்தாள் இணை அடி தாழ்ந்து
இறைஞ்சினளே. |
"ஆசையை அகற்றிய
மனத்தால் எழுச்சி கொண்டு, ஆண்டவனுக்கே
பலியாகும் தன்மையாய் நிந்தனை இல்லாத என் கன்னிமையின் வளத்தைக்
காக்க நினைத்துள்ளேன். இவ்விடத்து எனக்கு உற்ற காவலனாகிய நீயும்
சேர்ந்து அதனைக் காப்பாயாக." என்று கூறி, புகழ் கொண்ட பிறை மதியை
மிதித்த பாதத்தை உடைய மரியாள் சூசையின் இரண்டு கால்களையும்
பணிவோடு வணங்கினாள்.
|
16
|
மீதிடையூர்
பானுடுத்தாள் விளம்பியசொற் கதிர்வெள்ளங்
காதிடையூர்ந் திதயச்செங் கமலமுகை மேற்படவே
தாதிடையூ ரமுதெனநீர் தடக்கண்பெய் துளமலர்ந்து
போதிடையூர் மணக்கொடியோன் பொங்கருளாற் புகல்கின்றான். |
| |
மீது இடை ஊர்
பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம்
காது இடை ஊர்ந்து, இதயச் செங்கமல முகை மேல் படவே
தாது இடை ஊர் அமுது என நீர் தடக்கண் பெய்து, உளம் மலர்ந்து,
போது இடை ஊர் மணக் கொடியோன், பொங்கு அருளால்
புகல்கின்றான்: |
வானத்தில் ஊர்ந்து
செல்லும் பகலவனை ஆடையாக உடுத்த மரியாள்
கூறிய சொல்லாகிய கதிர் வெள்ளம், மலர்களிடையே தவழும் மணமுள்ள
கொடியைத் தாங்கி சூசையின் காது வழியாக ஊர்ந்து, தன் இதயமாகிய
|