| துன்பத்தைத் தீர்க்கக்கூடிய
வலிமையைத் தரும் ஒளி பொருந்திய அறிவு
பூண்டுள்ள உன்னைச் செழுமை வாய்ந்த துணைவியாகவும் தந்தருளினான்."
'அறிவு பூண் உன்னை'
என்று மாற்றிப் பொருள் கொள்க. ஒத்த +
என் + மனம் - 'ஒத்த வென் மனம்' என வரவேண்டியது, 'ஒத்தென்மனம்'
என வந்தது தொகுத்தல் விகாரம்.
|
20
|
அணித்தாக
வரிதாய வருட்புரிந்த நாயகன்றாட்
பிணித்தாக நசையொடுநான் பெறும்வயதோ ரீராறு
நணித்தாகிற் சாந்தனையு நறுங்கற்பு நலங்காக்கக்
குணித்தாகிக் கடவுடனைச் சாட்சியெனக் கூறலுற்றேன். |
| |
"அணித்து ஆக
அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தான்
பிணித்து ஆக நசையொடு, நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு
நணித்து ஆகில், சாம் தனையும் நறும் கற்பு நலம் காக்கக்
குணித்து ஆகி, கடவுள் தனைச் சாட்சி எனக் கூறல்
உற்றேன்." |
"அரிதான அருளை
அழகுடையதாக எனக்கு வழங்கிய ஆண்டவனின்
திருவடியைக் கட்டிப்பிடித்துக்கொள்ள நான் ஆசை கொண்டு, கொண்ட
வயது பன்னிரண்டை நெருங்குகையில், சிறந்த கற்பு நலத்தைச் சாகும்
வரையிலும் தவறாது காக்கத் திட்டஞ் செய்து கொண்டு, கடவுளையே
சாட்சியாக வைத்து வாக்குறுதி கூறலானேன்."
|
21
|
இளிசெயுமென்
றம்மணத்தை யேவியகால் வெருவுற்றே
னளிசெயுமென் னுயிர்நாத னவையறுநின் கன்னிமையா
லளிசெயுமென் கற்பினிதா யளிப்பதற்கன் றோமணமாய்க்
களிசெயுமென் னிறைவற்கோர் கைம்மாறே தறிகிலன்யான் |
|