|
30
|
எள்ளுமோர்
தவையிலா தெனினும் யாக்கையை
யுள்ளுமோர் தவத்தினா லொறுத்த தன்மையார்
விள்ளுமோர் மலருலைப் பெய்து வீழுநீர்
கொள்ளுமோர் மணமெனக் குணங்கொண் டோங்கினார். |
| |
எள்ளும் ஓர்
நவை இலாது எனினும், யாக்கையை
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார்,
விள்ளும் ஓர் மலர் உலைப் பெய்து வீழும் நீர்
கொள்ளும் ஓர் மணம் எனக் குணம் கொண்டு ஓங்கினார். |
தம்மிடம் இதழத்
தக்க குற்றம் எதுவுமே இல்லாதிருப்பினும்,
உயர்வாகக் கருதும் ஒப்பற்ற தவத்தினால் தம் உடலை வாட்டிய
தன்மையுள்ள அவ்விருவரும், விரியும் பருவத்து ஒப்பற்ற மலர்களை
உலையிலிட்டுக் காய்ச்சி வடிக்கும் பன்னீர் கொண்டதொரு மணம் போல
நற்குணங்களைக் கொண்டு உயர்ந்து விளங்கினர்.
| 31 |
பொன்னொளி
காட்டெரிப் பொறிக
ளோமணி பன்னொளி காட்டிய பாடை யோவுரு
வுன்னொளி காட்டிய வுளிய னேவுளந்
தன்னொளி காட்டிய தவம தேந்தினார். |
| |
பொன்
ஒளி காட்டு எரிப் பொறிகளோ?
மணி பன் ஒளி காட்டிய படையோ? உரு
உன் ஒளி காட்டிய உளியனோ? உளம்
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார். |
பொன்னின் ஒளியை
வெளியே எடுத்துக் காட்டும் தீப் பொறிகளோ?
மணியுள் செறிந்து கிடக்கும் ஒளியை வெளியே காட்டிய சாணைக் கல்லோ?
தச்சன் கருதிய உருவத்தை ஒளி பெறக்காட்டிய உளியோ? இவ்வாறெல்லாம்
ஒப்பிடத் தக்க வகையில், உள்ளம் தன் ஒளியை வெளியே காட்டக்
காரணமான தவத்தை அவ்விருவரும் தாங்கி நின்றனர்.
தனி, 'தனியன்'
எனப்படுதல்போல், உளி, 'உளியன்' எனச்
சிறப்புணர்த்தும் 'அன்' விகுதி பெற்று நின்றது. அதனைச் சாரியை என்று
கொள்ளுதலும் ஒன்று.
|