கோல் திருந்தினர்க்கு
எலாம் கோ என்பான் பணி
நூல் திருந்திய முறை நுதலி ஆக்கிய
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று, ஆண்டகை
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே. |
திருந்திய செங்கோலை
உடைய மன்னர்க்கெல்லாம் மன்னன்
எனப்படும் ஆண்டவன் ஆக்கிய வேத நூலைத் திருந்திய முறையில்
ஆராய்ந்து தம் வாழ்க்கை நெறியாக ஆக்கிக்கொண்ட தன்மையால்
திருந்திய இவ்விருவர் உள்ளங்களும் பழுதென்பதே இல்லாமல், ஆண்டவன்
வீற்றிருந்து ஆட்சி செய்யும் அரியணைக்குரிய மேன்மை பொருந்தியன
ஆகும்,
'பொருந்தியன
ஆகும்' என முடிக்குஞ் சொற்கள் வருவித்து
உரைக்கப்பட்டன. 'கோல் திருந்தினர்' என்பதனை, 'திருந்து கோலினர்'
என மாற்றிக் கூட்டுக.
| 29 |
வெப்பரு
ளாசையை வெறுத்த சீர்கொடு
தப்பருள் பொருளினைத் தவிர்த்த வாண்மையா
லப்பொருள் படைத்தனை யடைந்த மாண்பின
ரெப்பொரு ளனைத்திலு மிதயத் தோங்கினார். |
| |
வெப்பு அருள்
ஆசையை வெறுத்த சீர் கொடு
தப்பு அருள் பொருளினைத் தவிர்த்த ஆண்மையால்,
அப் பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர்
எப்பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார். |
துன்பத்தைத்
தரக் காரணமான ஆசைகளையெல்லாம் வெறுத்து
விலக்கிய சீரைக் கொண்டு, குற்றத்தைத் தரும் இயல்புள்ள பொருட்
செல்வத்தை முற்றிலும் புறக்கணித்த வல்லமையால்,
அப்பொருள்களையெல்லாம் படைத்த ஆண்டவனையே அடைந்த
மாண்புள்ள அவ்விருவரும் எப் பொருளாலும் வரும் எல்லா
இன்பங்களிலும் மேலாகத் தம் இதயத்தில் உயர்ந்து விளங்கினர்.
வெப்பு,
அருள், தப்பு அருள் என்ற விடங்களில், 'அருள்' என்பது
இகழ்ச்சிக்குறிப்பு. |