மானமே வேலியாய்,
வகுத்த சொல் தரும்
ஞானமே தூதனாய், நயப்ப யாவரும்
தானமே தோழனாய், அறிவின் தன்மையால்
வானமே உறையுளாய் மடிவு இல் வாழுவார். |
மானத்தையே தமக்கு
வேலியாகவும், ஞானத்தையே ஆண்டவன்
வகுத்த சொல்லைத் தமக்கு எடுத்துத்தரும் தூதுவனாகவும், யாவரும்
விரும்புமாறு தானத்தையே தமக்குத் தோழனாகவும், மண்ணுலகில்
உடலோடு இருப்பினும் அறிவு உணர்வினால், வானத்தையே தமக்கு
உறைவிடமாகவும் கொண்டு ஒரு குறையுமில்லாது அவ்விருவரும் வாழ்வர்.
| 27 |
எள்ளலைக்
கலந்தவாழ் விழந்த கன்றுவான்
வள்ளலைச் சிவணியுள் மலிய வாழுவா
ரள்ளலைக் கலந்தநீர் கடந்த ருந்திலா
தெள்ளலைச் சுனையடுத் துண்ட சீர்மையே |
| |
எள்ளலைக் கலந்த வாழ்வு இழந்து அகன்று, வான்
வள்ளலைச் சிவணி உள் மலிய வாழுவார்,
அள்ளலைக் கலந்த நீர் கடந்து அருந்து இலா,
தெள் அலைச் சுனை அடுத்து உண்ட சீர்மையே. |
சேற்றோடு கலந்த
நீரை அருந்தாமல் கடந்து சென்று, தெளிந்த
அலையை உடைய ஊற்றை அடுத்துத் தூய நீரை உண்ட சிறப்புப் போல,
இகழ்ச்சியோடு கலந்த இவ்வுலக வாழ்வின் இன்பங்களை இழக்க விட்டு
விலகி, வானுலக வள்ளலாகிய இறைவனோடு பொருந்தி நின்று உள்ளம்
பூரித்து வாழ்வர்.
முதல்
மூன்றடிகளும் முதற்கண் மூன்றாம் வேற்றுமை (ஓடு) பெற,
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) பெற்று மயங்கிவந்தன.
| 28 |
கோற்றிருந்
தினர்க்கெலாங் கோனென் பான்பணி
நூற்றிருந் தியமுறை நுதலி யாக்கிய
பாற்றிருந் திவருளம் பழுதற் றாண்டகை
வீற்றிருந் தாளுமா சனத்தின் மேன்மையே. |
|