பக்கம் எண் :

முதற் காண்டம்315

     'கருணை...மரியாள்' - கரை இல்லாத கருணைக் கடலாகிற மரியாள்.
 
55
மொய்யுந் துறவே யெந்தையடி முறைகொண் டடைய வழி
                                    யென்றாற்
பொய்யு மிருளும் பொதிர்ந்ததெலாம் போக்குந் துறவோ
                               குறை யென்பார்
கொய்யும் புரை தீ ரிறைவனருள் கொடுக்குந் துறவே
                                 யின்பலையே
மெய்யு முயிரு நீயென்றான் விளங்கி ரறக்கண் ணாடியினான்.
 
"மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி
                                  என்றால்
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ
                                  குறை என்பார்?
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே!
                                  இன்பு அலையே!
மெய்யும் உயிரும் நீ" என்றான் விளங்கு ஈர் அறக்
                                  கண்ணாடியினான்.

     இல்லறம் துறவறம் என விளங்கும் இரண்டு அறங்களையும் விளக்கிக்
காட்டும் கண்ணாடி போன்றவனாகிய சூசை, "செறியக் கொண்ட துறவே நம்
தந்தையாகிய ஆண்டவன் பாதத்தை முறையாய் அடைவதற்கான
வழியென்பது தெரிந்தால், பொய்யும் இருளும் நிறைந்த தீமையை யெல்லாம்
போக்கும் இத்துறவையோ சிலர் குறையுடையது என்று கூறுவர்? தன்னிடத்து
நீக்கத்தக்க குற்றம் எதுவும் இல்லாத இறைவனின் அருளிப் பெற்றுக்
கொடுக்கும் துறவறமே! இன்பக் கடலே! எனக்கு உடலும் உயிரும் நீயே"
என்றான்.
 
                   56
தாயு நீயே தந்தையுநீ தாவு நசைநாட் டியநீயே
தீயு நசைதீர் நசைநீயே செல்வ நீயே யுயிரினிதிற்
றோயு மலைநீ யாகியுனைத் துறவா தணுகல் செய்துறவோ
காயு வினையென் பாரென்றாள் கதிப்பால் காட்டுங்
                                  கஞ்சனத்தாள்.