| 17 |
மருந்தடக்
கனிமுக மகிழ்ந்து நாயக
னருந்தடத் தவர்க்குநல் லருளோ டாசியைத்
தருந்தடத் திவர்ந்திருட் புதைத்த சாமத்தாங்
கிருந்தடத் தேகுதற் கெழுந்து போயினார். |
| |
மருந்து அடக்
கனி முகம் மகிழ்ந்து நாயகன்,
அருந் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியைத்
தரும் தடத்து இவர்ந்து, இருள் புதைத்த
சாமத்து,
ஆங்கு
இருந் தடத்து ஏகுதற்கு, எழுந்து போயினார். |
அமுதத்தையும்
வென்ற தன்மையாய் ஆண்டவனாம் அப் பாலன்
கனிந்த முகம் காட்டி மகிழ்ந்து, அரிய பெருமையாய் நல்ல அருளோடு
ஆசியை அவர்களுக்குத் தரும் மாண்பினால் அவர்கள் எழுச்சி கொண்டு,
அங்கிருந்து நெடிய வழித் தடத்திற் செல்வதற்கு இருள் கவிந்த நள்ளிரவில்
எழுந்து போயினர்.
| 18 |
இருச்சுட ரோன்பட
வீரை யாயிரங்
குருச்சுடர் மேனியைக் கொண்ட வானவர்
திருச்சுட ரோனெனச் சிறுவன் றாளிணை
பருச்சுடர் பாய்ந்துறப் பணிந்து தோன்றினார். |
| |
இருச் சுடரோன்
பட, ஈர் ஐயாயிரம்,
குருச் சுடர் மேனியைக் கொண்ட வானவர்,
திருச் சுடரோன் என் அச் சிறுவன் தாள் இணை,
பருச் சுடர் பாய்ந்து உறப் பணிந்து தோன்றினார். |
பெருஞ்
சுடரோன் எனப்படும் கதிரவன் ஒளி கெடத் தக்க நிறம்
வாய்ந்த ஒளி மேனியைக் கொண்ட பதினாயிரம் வானவர், திரண்ட ஒளி
பாய்ந்து நிலைக்குமாறு, திருச்சுடரோன் எனப்படும் அச்சிறுவனின் இரண்டு
அடிகளையும் வணங்கியவண்ணம் வந்து தோன்றினர்.
'இருஞ்சுடர்' என்பது,எதுகை ஓசைப் பொருட்டு, 'இருச்சுடர்' என
நின்றது.
| 19 |
எல்லியல்
படச்சுட ரிரவி றோற்றினார்
பல்லியங் கடலொலி படமு ழக்கினா
ரல்லியங் குழவியை யளவில் வாழ்த்தினார்
கல்லியம் பாத்தொடை கனியப் பாடினார். |
|