வெண்மை
செறிந்த மலரின் அழகு போல் தூயவளாகிய கன்னி
மரியாள் கையில் ஞானம் நிறைந்து மலர்ந்துள்ள மகனை நோக்கும்
பொருட்டு, வானமெங்கும் நெருங்கப் பூத்த அழகு போலத் தாங்கி நின்ற
பல விண்மீன்கள் செறிந்து கிடந்து, அழகுடன் விரிந்த கண்களை
ஒத்திருந்தன.
மிடைந்த + அலர்
- 'மிடைந்தவலர்' என்பது 'மிடைந்தலர்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. 'அலர் சேடு கண்' என்பதனை, 'சேடு
அலர் கண்' என மாற்றிக் கூட்டுக.
31 |
மனவ
ணங்குவ ணங்கடி நாயகன்
மனவ ணங்குவ ணங்கில்வ ருந்தினார்
மனவ ணங்குவ ணங்கலி லாளனு
மனவ ணங்குவ ணங்கும ணங்குமே. |
|
மனவு அணங்கு வணங்கு
அடி நாயகன்
மன் அவ் அணங்கு வணங்கு இல்
வருந்தினார்,
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்,
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே. |
தன்
மனத் துயரம் அடங்குதல் இல்லாத கணவனாகிய சூசையும்,
மணியின் அழகும் தோற்று வணங்கும் தெய்வப் பெண் போன்ற
மரியாளும், நவமணிகள் தம்மிலும் அழகியதென்று வணங்கும் திருவடிகளை
உடைய ஆண்டவன்பால் நிலைகொண்ட அத்துன்பங்கள் குறையாமை
கண்டு வருந்தினர்.
மன் + அ + அணங்கு
- 'மன்னவ் வணங்கு' என வரவேண்டியது,
ஈரெழுத்துக்கள் இடையிட்டுத் தொக்கமையால் தொகுத்தல் விகாரம்.
32 |
ஆர
ணந்தரு மாண்டகை யாகுலக்
கார ணந்தரு கட்புனல் கண்டிடர்
பூர ணந்தரு மார்புபு டைத்தெலா
வார ணந்தரும் வானுறக் கூக்குரல். |
|
ஆரணம் தரும்
ஆண்டகை ஆகுலக்
காரணம் தரு கண் புனல் கண்டு, இடர்
பூரணம் தரு, மார்பு புடைத்து, எலா
வாரணம், தரும் வான் உறக் கூக்குரல். |
|