பக்கம் எண் :


90திருத்தொண்டர் புராணம்

 

சூலை அந்நிலையில் அகன்றிடலும் நாயனார் திருவுள்ளத்தில் முதல்வன் கருணையும் சூலையும் என்ற எண்ணமே மிக்கு எழுந்தன. அவற்றுள் மூலமாய்ப் பெரிதாகிய கருணையை மேல்வரும் பாட்டாலும், கருவியாகிய சூலையை அதன்மேல் அடுத்துவரும் பாட்டாலும் துதிக்கின்றார்.

71

1337.

அங்கங் களடங் கவுரோ மமெலா
         மடையப் புளகங் கண்முகிழ்த் தலரப்
பொங்கும் புனல்கண் கள்பொழிந் திழியப்
         புவிமீ துவிழுந் துபுரண் டயர்வார்,
"இங்கென் செயலுற் றபிழைப் பதனா
         லேறா தபெருந் திடரே றிடநின்
தங்குங் கருணைப் பெருவெள் ளமிடத்
         தகுமோ?" வெனவின் னனதா மொழிவார்.

72

1338.

"பொய்வாய் மைபெருக் கியபுன் சமயப்
         பொறையில் சமணீ சர்புறத் துறையாம்
 அவ்வாழ் குழியின் கண்விழுந் தெழுமா
         றறியா துமயங் கியவம் புரிவேன்
 மைவா சநறுங் குழன்மா மலைபாண்
         மணவா ளன்மலர்க் கழல்வந் தடையும்
 இவ்வாழ் வுபெறத் தருசூ லியினுக்
         கெதிர்செய் குறையென் கொ? லெனத் " தொழுதார்.

73

1337.(இ-ள்.) வெளிப்படை. திருமேனியில் எங்கும் உள்ள உரோமங்கள் எல்லாம் ஒருங்கே மகிழ்ச்சியால் சிலிர்த்து நேர்நிற்கக், கண்களிலிருந்து இடையறாது பொங்கும் ஆனந்தக் கண்ணீர் வழிந்து ஒழுகத், தரையின்மேல் விழுந்துபுரண்டு ஆனந்தபரவசராகிய நாயனார், "இவ்விடத்து எனது செய்கையினால் வந்த பிழை காரணமாக, ஏறாதபெரிய திடரிலும் ஏறிடும்படி உமது நிலைபெற்ற கருணையாகிய பெருவெள்ளத்தைப் பெருக்குதலும் தகுதியாமோ?" என்று இவ்வகையான மொழிகளைத் தாமே எடுத்துக் கூறுவாராகிய,

72

1338.(இ-ள்.) வெளிப்படை. "பொய்யை மெய்யென்று பெருக்கிய புன்சமயமாய்ப் பொறுமையற்ற சமணர் என்னும் நீசர்களது புறச்சமயமாகிய அந்த ஆழமான படுகுழியினிடத்தே விழுந்து, மேல் எழுகின்ற வழியையறியாமல்; மயங்கி அவத்தொழில் செய்கின்ற நான், மயிர்ச்சாந்து மணம் வீசும் நறிய கூந்தலையுடைய பார்வதியம்மையாரது மணவாளராகிய சிவபெருமானுடைய மலர் போன்ற பாதங்களை வந்து அடையும் இப்பெருவாழ்வினைப் பெறத்தரும் இந்தச் சூலைநோயினுக்குக் கைம்மாறாகச் செய்யும் உபகாரம் என்ன வுள்ளது?" என்று அச்சூலையைச் சுட்டி வணங்கினார்.

73

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1337.(வி-ரை.) அடங்க - எங்கும் உள்ள; அடைய - முழுதும்.

உரோமம் புளகங்கள் முகிழ்த்தலர்தலாவது - மயிர்களெல்லாம் நேராய் நிற்றல். புளகாங்கிதம் என்ப. பெரும் அச்சத்தாலும். அன்பு மிகுதியாலும் மயிர்முகிழ்க்கும். இங்கு அன்பு மிகுதியால் முகிழ்த்தலர்ந்தது.

புனல் கண்களிற் பொழிந்து இழிய என்க. இஃது ஆனந்தக் கண்ணீர். இறைவனது பெருங்கருணையினையும், தாம் அவர்பாற் செய்த பெரும்பிழையினையும்