ஞிமிறு ஒலிப்ப - கருப்பஞ்சாறும் தேனும் கலந்த நீத்தமாதலின் வண்டுகள் மொய்த்தும் எழுந்தும் ஒலித்தன. புதுப்புனல் போல் - புதுப்புனல் - வெள்ளநீர். இது புனலல்லாது புனலின் போலியாயிருத்தலின் போல் என்றார். புதுமை - எதிர்பாராத - கண்டிராத - என்ற குறிப்பும் தருவது. போய் - என்பது பாடமாயின் அதற்குத் தக உரைத்துக கொள்க. உடை மடை - உடைந்த மடை. மடை - (காலின்) நீரைத் தன் வழியாய்ச் செலுத்திப் பயிர்களை உண்ணச் செய்வதனால் மடை எனப்பட்டது. மடுத்தல் - உண்ணுதல் - மடுக்கச் செய்தல் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. அக்கரும்பு - குறைக்கப்படதனாற் கொழுஞ்சாறு பாய்ந்து பெருக்கெடுக்கக் காரணமாகிய அந்த என முன்னறி சுட்டு. நோய்க்கு மூலமாவது எதுவோ அதுவே மருந்துமாகக் கொள்ளும் ஒப்புமுறை மருத்துவம் (Homeopathy) போன்று, இங்குப் பெருநீத்தமாய் மடை உடையக் காரணமாகிய கரும்பினாலர்கிய பொருளையே அவ்வுடைப்பு அடைக்கப் பயன்படுத்தினர் என்ற குறிப்பினை அகரச்சுட்டு உணர்த்தி நிற்பதும் காண்க. "அந்நோய் மருந்து" என்ற குறளும் காண்க. விஷப்பிரதி விஷத்திரட்டு என்பதோர் மருத்துவ நூலுமுண்டு. கடைஞர் - அடைப்ப - எனக் கூட்டி முடிக்க. கட்டியின் அடைப்ப - இன் - கருவிப் பொருளில் மூன்றாவதின் பொருளில் வந்தது. இதனால் இந்நாட்டுக் கரும்புப் பயிரின் செழுமை உணர்த்தப்பட்டது. "கரும்பெல்லாம் கண்பொழிதேன்" என் முன்பாட்டில் தோற்றுவாய் செய்த தனைத் தொடர்ந்து, அவ்வாறு விளைந்து வளர்ந்த கரும்பு முற்றியபோது கொண்ட கொழுமையைக் கூறிய கண்டு கொள்க. இது புனைந்துரைத்தல் (அதிசம்) என்னும் கற்பனை அணி என்று சிலர் எண்ணக் கூடும். இஃது இந்நாட்டு உண்மையில்யல்பு காட்டும் தன்மையணியே என்று கூறின் அது மிகையாகாது. கரும்புப் பயிர் மிகச் சிறந்தோங்குவது இந்நாடு என்பதற்கு இந்நாட்டில் நெல்லிக்குப்பம் முதலிய பல ஊர்களிலும் செழித்துள்ள கரும்பாலைத் தொழிற் சிற்பபே சான்றுபகரும். இக்கருத்துப்பற்றியே பிற்காலத்து வாழ்ந்த பெருந் தமிழ்வாணராகிய சிவப்பிரகாச முனிவரும் "செங்கரும்பா, லேரதங் கோட்டு வயல்சூழ் முதுகுன்று" என்றுகூறித் தமது பழமலையந்தாதியைத் தொடங்கினர். இக்காட்சிகள் இன்றும் இந்நாட்டில் நேரிற்காண உள்ளன.1 ஊர்கள்தொறும் என்ற குறிப்பும் இச்சிறப்பு இந்நாட்டில் எங்கும் உள்ள தென்பது குறித்து நின்றது. கரும்பு பொழி குறைக்கொழுஞ் சாறு - தேன் கிழியாறிழிந்து - புதுப்புனல் போம் - என்பனவும் பாடங்கள். 5 1271. | கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட, மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகங்காட்டப், பெருஞ்சகடு தேர்காட்ட, வினைஞரார்ப் பொலிபிறங்க, நெருங்கியசா துரங்கபல நிகர்ப்பனவா நிறைமருதம். |
6 (இ-ள்.) வெளிப்படை. கருங்கதலியின் பெரிய நீண்ட குலைகள் யானைகளின் நீண்டகையினையுடைய முகம்போல விளங்கவும், அதன் பக்கத்தில் வளரும் 1. | வண்டியோட்டுபவன் கரும்பினால் வண்டி எருதுகளை ஒச்சிச் செலுத்திய தனை நான் நேரில் கண்டேன். |
|