பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்11

 

கதிர்களையுடைய நெற்பயிர்கள் வெற்றியுடைய குதிரைகளின் முகம்போல விளங்கவும், பெருகிய வண்டிகள் தேர்களைப்போல விளங்கவும், உழவர்களின் ஆரவார ஒலி விளங்கவும் இவ்வாறுள்ள காட்சி நிறையும் மருதநிலத் தோற்றங்கள் நெங்கிய நால்வகைச் சேனைகளைப் போன்றனவாகும்.

(வி-ரை.) கைமுகம் - கையினையுடைய முகம். "முகத்தது கை" (11-ம் திருமுறை - விநா - இர - மணி - மா - 6) என்ற நம்பியாண்டார்நம்பிகள் திருவாக்குக் காண்க. காட்ட என்பன மூன்றும் உவம உருபுகள். கருங்கதலி - வாழையின் ஒருவகை. "வேழக், கைபோல் வாழைக் காய்குலை யீனும்" (பிரமபுரம் - குறிஞ்சி - 2) என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்கும் காண்க. "வாங்கையை யானையென, வீண்குலை வாழை வளர்" (ஆண்டார் குப்பம் - 5) என்ற திருப்புகழும் இக்கருத்துப் பற்றியது. இவ்வகைய வாழைக் குலைகள் மிக நீண்டு அடிபெருத்து நுனி சிறுத்தும் அடிமுதல் நுனிவரை சுற்றிலும் வெளியிடமின்றிச் செறிந்த காய்களையுடையன. இதனை ஆயிரம்ஈனி வகை
என்பர்.

களிற்றுக் கைமுகம் - புரவி ழகம் - தேர் - (காட்ட) என்பன மூன்றும் மெய்யும் உருவும்பற்றி வந்த உவமைகள்.

மருங்கு - வாழையின் புறத்தே பக்கத்தில் நெற்பயிர் செய்யப்படுதல்பற்றி முன் உரைத்தவை பார்க்க. "பாலெல்லாம்" (1269) என்றகருத்துமிது.

வளர்கதிர்ச் செந்நெல் - வளர் என்றதனால் உயர்ந்த வளர்ச்சியையும், கதர் - என்றதனால் வளர்ந்து விளைந்த நெற்கதிர் கொத்துக்களாகச் சாய்ந்திருத்தலையும், செந்நெல் என்றதனால் நிறத்தையும் குறிப்பிடவே, முற்றிநீண்டு வளைந்து தொங்கும் கதிர்களையுடை நெற்பயிர், பிடரிமயிர்த் தொகுதியுடைய குதிரை முகம் போன்ற தென்க. "வளை கதிர்ச்செந்நெல்" என்ற பாடமுமுண்டு. அது பாடமாயின் இவ்வுமையை மிகப் புலப்படுத்துமென்க.

"இனப்பண்ணை உழும்பண்ணை" (1268) என்றதனால் காணும்படி உழுது பயிரிடப்பட்ட நெல், "பாலெல்லாம் கதிர்ச்சாலி" (1269) என அடுத்த பாட்டில் ஒங்கிக் கதிர்முற்றி நின்று, வயப்புரவி ழகம் காட்ட என இப்பாட்டில் முற்றித் தலை சாய்ந்து விளங்கும் எனக் காட்டிய திறத்தால், வைப்பு முறையும், நெல் வளர்ச்சி முறையும் ஒன்றுபடத் தேற்றிய வகை கண்டுகொள்க. இதுபற்றித் திருநாட்டுச் சிறப்பில் உரைத்தவையும் பார்க்க.

சகடு - நெல், புல் முதலியனவற்றை எடுத்துச் செல்லும் வண்டிகள். வினைஞர் - நெல் விளைந்தபின் அறுத்து அடித்து முதல் காணும் ஏவல் மக்கள். உவமையில் இரட்டுற மொழிதலால் காலாட்படை கொள்ளப்படும்.

சாதுரங்கபலம் - நால்வகைச்சேனை. பலம் - அரசனது பலத்துக்குக் காரணமா யிருப்பது எனச் சேனைக்கு ஆகுபெயர் போலும். பலம் - பலன், எனச் சொற்சிலேடைபெற மொழிதலால் நெற்பயன் குறித்துப், பலத்தினால் மருதத் தோற்றங்கள் சதுரங்கத்தை நிகர்ப்பன என்றுரைத்தலுமாம்.

களிறு - புரவி - தேர் - (காலாள்) வினைஞர் - என்பன நால்வகைச் சேனைகள். நெற் போர் - வைக்கோற் போதர் - என்று மருதநிலத்து வயல்களினும் போர் என்னும் வழக்குண்மையும் காணப்படும். "ஈடு பெருக்கிய போர்" (926).

சாதுரங்க பலம் - அரச னேவல்வழிச் சேனைகொண்டு பகைவர்மேற்செல்லுதலும் வேளாளர்களுக்குரிய தொழில்களுள் வைத்தெண்ணப்படும். இதுபற்றி "அரசர் சேனாதிபதியாஞ் செப்பவருங்குடி" (872) என்ற விடத்துரைத்தவை பார்க்க. இச் சரிதமுடைய நாயனாரது அந்த மரபுரிமைபற்றியும்,