| இனப்பண்ணை யுழும்பண்ணை யெறிந்துலவி யெவ்வுலகும் வனப்பெண்ண வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும். |
3 (இ-ள்.) புனப்பண்ணை...சுமந்து - குறிஞ்சி நிலத்திலிருந்து மூங்கில்களில் உளவாகிய முத்துக்களோடு, புல்லைப்புறவங்களிலிருந்து மணமுடைய புதுமலர்களின் தொகுதியை அளவற்ற அலைகளாற் சுமந்துகொண்டு (அவற்றைக்); கரைமருங்கு - இருபுறமும் கரைகளில்; பெரும்பகட்டேர்...எறிந்து உலவி - பெரிய எருமைகள் பூட்டிய அளவொத்த கூட்டமாகிய ஏர்கள் உழுதொழில் செய்தற்கிடமாகிய வயல்களில் எறிந்து பரந்து உலாவி; எவ்வுலகும்...பெருகும் - எவ்வுலகங்களிலும் தன் அழகினை எடுத்து மேம்பாடாக எண்ணத்தக்கதாய் ஒடி வருகின்ற பெண்ணை என்னும் பெருநதி பாய்தலால் வரும் வளங்கள் (அந்நாட்டில்) பெருகுவன. (வி-ரை.) புனம் - குறிஞ்சி; பண்ணை - பணை என்பது சந்த நோக்கிப் பண்ணை என மெய் விரிந்து வந்தது. பணை - மூங்கில்; ஈண்டும், பண்ணை - தொகுதி என்றே கொண்டு, வகையால் மிகுதியாகிய முத்து முதலிய மணிகள் என்றலுமாம். புறவு - முல்லைப் புறவு. மலரின் கனப்பு - மலர்களின் தொகுதி. திரை சுமந்து - மலர் - பண்ணை - எறிந்து - உலவி - வரும் - மாநதி என்று கூட்டிக் கொள்க. பண்ணை இன ஏர் - என்க. பண்ணை - கூட்டம். தொகையால் மிகுதி குறித்தது. இனம் - ஏர்கள் தம்மில் ஏற்றத்தாழ்வின்றி ஒத்திருந்த நிலை குறித்தது. உழும் பண்ணை - பண்ணை - வயல். சொற்பின் வருநிலை. மணியினொடும் - மாநதியின் திரை சுமந்துவரும் மணி - மலர் என்ற இரண்டனுள் ஒடு உருபை மணியினுடன் சார்த்திக் கூறியது சிறப்புணர்த்தற்கு, வளம் பெருகும் - வளத்தின் பெருக்கினைக் குறிக்கப் பண்ணைமணி, மலரின் கனப்பு, எண்ணில் திரை, சுமந்து, இனப்பண்ணை ஏர், என்பன பலவும் மிக்க தொகுதிகளாகக் .கூறப்பட்டமை காண்க. வளம் - "ஏரின் மல்கு வளத்தி னால்வரு மெல்லை யில்ல தோர் செல்வமும்" (441) மணிகளால் வருனவுமாம். திரைசுமந்து - எறிந்து - உலவி - உருவகம். "அஃறிணை மருங்கினும் அறையப் படுமே" என்பது இலக்கணமாதலின். எறிந்து என்ற இலேசால் விலைபெற்ற மணி மலர்களையும் அவற்றின் மதிப்பை எண்ணாமலும் தன்னலங் கருதாமலும் பிறர் பயன் கருதியே இலகுவில் எறியும் வள்ளற்றன்மை குறிப்பாலுணர்த்தப்பட்டது; தற்குறிப்பேற்ற அணி. "முகந்துதர - கை ஏற்கும்" (1041) என்றது பார்க்க. உலவி - வேகமாய் ஒடிச்சென்றால் உழுவதற்குதவாது பண்ணையும் சிதைவு படுமாதலால் மெல்லப் பரவிச் சென்று என்க. உழும்பண்ணை - உலவி - என்றதனால் உழுகின்ற பருவத்திற் பரந்த நீர்ப்பெருக்கு வருதலும், அந்நீர் மெல்லப்பரந்து செல்லுதலும், நீரின் பொருட்டுத்தேடி முயன்று வருந்தாமல் தானாகவேவரும் நீரின் உதவிக்கொண்டு உழுவர் உழுவு செய்தலும் உணர்த்தப்பட்டன. "பெரும்புன னீத்தம், மலர்த்தடம்பணை வயல் புகுபொன்னி" (1031) என்றவிடத் துரைத்தவை பார்க்க. எவ்வுலகும் வனப்பும் எண்ண - பெண்ணையாற்றின் அழகின் மிகுதி குறித்தது. கண்ணாற் காணப்படுதலே யன்றிப் பிறவாற்றால் அனுபவிக்கப்படும் வளங்களுமுள்ளன என்பார். பாய் வளம் பெருகும் என்றார். மாநதி என்ற கருத்துமிது. |