பக்கம் எண் :


8திருத்தொண்டர் புராணம்

 

வளம் பெருகும் - முன்பாட்டில் வளநாடு என்று கூறியதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் இயல்பாயுள்ள வளம் இந்த மாநதி பாய்தலாற் பெருகுவன என்று கூறும் வகையால் நாட்டுவளம் மாநதியினால் பெருக்கமடைதலே யன்றிப் புதிதாக உளதாக்கப்பட்டதன்று என்று காட்டிய திறம் காண்க. இத்திருநாட்டில் கெடிலம் முதலிய பெருநதிகள் பிறவும் பாய்ந்து வளப்படுத்துதலும் கருதுக.

நாட்டில் என்பது முன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது.

பெண்ணை மாநதியின் சிறப்பினைச் சொல்லும் பொருளும் ஒத்தியங்க, எடுத்துக் கூறும் வகையால், பண்ணை - எண்ணில் - பண்ணை - எண்ண என எதுகை ஓசைபட யாப்பமைத்த திறமும் காண்க.

இப்பாட்டால் ஆற்றுச்சிறப்பொடு புணர்த்தி நாட்டுவளம் கூறினார்

புனற்பண்ணை - மலரும் - கனைப்பெண்ணில் - என்பனவும் பாடங்கள்.

3

1269.

காலெல்லாந் தகட்டுவரால்; கரும்பெல்லாங் கண்பொழிதேன்;
பாலெல்லாங் கதிர்ச்சாலி; பரப்பெல்லாங் குலைக்கமுகு;
சாலெல்லாந் தரளநிரை; தடமெல்லாஞ் செங்கழுநீர்;
மேலெல்லா மகிற்றூபம் விருந்தெல்லாந் திருந்துமனை.

4

(இ-ள்.) வெளிப்படை. நீர்க்கால்களிலெங்கும் தகட்டு வடிவினவாகிய வரால் மீன்கள் உள்ளன; கரும்புகளில் எங்கும் கணுக்களாற் பொழியுந் தேன்உளது; பக்கங்களில் எங்கும் கதிர்களையுடைய நெற்பயிர்கள் உள்ளன; இடமகன்ற நிலங்களில் எங்கும் குலைகளையுடைய கமுகு மரங்கள் உள்ளன; படைச் சால் உழுத இடங்களெங்கும் முத்துக்களின் தொகுதி உள்ளன; குளங்களில் எங்கும் செங்கழுநீர் உள்ளன; விருந்து எப்போதும் திருந்த உள்ள மனைகளின் மேலிடங்களில் எங்கும் அகிற்றூபம் உள்ளன.

(வி-ரை.) எல்லாம் - சொற்பொருட்பின் வருநிலை. விருந்து எல்லாம் - என்ற விடத்து எல்லாம் என்பது காலங்குறித்தது. பிற விடங்களில் வரும் எல்லாம் - என்பன இடமுணர்த்தி நின்றன. எல்லாவிடத்தும் முற்றும்மைகள் தொக்கன.

கால் - நீர் ஓடும் கால்கள். தகட்டுவரால் - வரால் மீன்கள் தகடு போன்ற வடிவுடையன; அகலமாய் நீண்டு துவளுதலாலும், துவளுந்தோறும் இருபுறமும் மின்னுதலாலும் தகடு போன்ற என்றார். சிறந்த தன்மையணி,

கண்பொழி தேன் - கண் - கணு என்பர். கணுக்கால் பொழியுந் தேன் உள்ளது. கண் - என்புழி மூன்றனுருபு தொக்கது. செழிப்பு மிகுதியால் உள்ளே சாறு நிறைதலால் கணுக்கள் வெடித்துச் சாறு வழியும் என்பது.

பால் - நீர் பாயும் இடங்களின் பக்கம். பரப்பு - சாலி விளையும் வயல்களின் பக்கத்துப் பரந்த இடங்கள். "கரும்பல்ல நெல்லென்ன" (65), "ஒங்கு செந் நெலின் புடையன உயர்கழைக் கரும்பு" (1104) என்ற விடங்களி லுரைத்தவை இங்கு நினைவு கூர்தற்பாலன.

சால் - உழுது பண்படுத்திய நிலத்தில் மேலும் உழுவுசெய்ய ஏர் செல்லும் இடம். உழவுத் தொழிலில் வழங்கும் மரபுப்பெயர். "உழுத சால்வழி யேயுழு வான்பொருட்டு" (தனித் திருக்குறுந் தொகை) என்பது தேவாரம்.

தரளநிரை - தொகுதிகளின் பன்மை குறித்தது. புனப்பண்ணை மணிகளைப் பெண்ணைமாநதி திரைகளாற் சுமந்து ண்ணையில் எறிந்து உலவுகின்ற வளம் பெருகும் என முன்பாட்டிற் கூறியபடியால், அக்கருத்தைத் தொடர்ந்து, அவ்வாறு எறிந்து வீழ்த்திய முத்துக்களின் தொகுதிகள் ஏர் உழுத சால்களில் காணப்படுவன என்றார். தரளம் - முத்து. இது குறிஞ்சியிலும் படுபொருள்களுள்