(9) பொன்னார் மேனியினீர் - "பொன்னார் மேனியனே" (நம்பிகள்). "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" (பொன். அந்), மெலியும் பிறை - குறைந்து ஒருகலையுடன் நின்ற பிறை. துன்பே கவலையே பிணியே என்க. ஏகாரங்களுக்கு எண்ணுப் பொருள் கொள்க. பிணியால் வரும் துன்பமும், அதனால் வரும் கவலையும் என்பது. அடியார்படுவது இதுவேயாகில், இனி, என்போலிக ளும்மைத் தெளியார் என்க. தெளிதல் - அறிந்து அடைதல். அமையும் - பொருந்தும் - சாலும். எஞ்ஞான்றும் அன்பே செய்யக்கடவதாய் நிற்கும். துன்பம் வரும்போது பெரியோர் இது எமது வினைப்பயன் என்று அனுபவித்து அடிமையிற் பிறழாது நிற்பர்; என்போன்ற அறிவிலிகள் அங்ஙனம் துணியார். - (10) ஈர் உரிதோல் போர்த்தாய் என்க. வகிர்ந்து உரித்ததோலை. புறங்காடு - சருவசங்கார மயானம். ஆர்த்தானாகிய அரக்கன். "ஆர்த்தவா யலறு வித்தார் அதிகைவீ ரட்டனாரே", "அடர்த்திட்டுப் பின்னை அருளும் செய்த அதனைக் கருதுவீராக. தன்வலியே கருதிக் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற சிவாபராதத்துக்காக அடர்த்தும், பின்னர்ச் சரணடைந்து துதித்தமையால் அருளியும் உள்ள அதுபோல், சமணசமயப் படுகுழி, வீழ்ந்து உம்மை இகழ்ந்து அபசாரம் செய்ததற்காகச் சூலைநோய் தரினும், வந்தடைந்தேனாதலின் என்னையும் ஆட்கொண்டு வேதனைவிலக்கி யருள்புரிவீர் என்பதாம். இராவணனுக்கு நாயனார் முன்னைய நிலையில் விரகறிவித்தனர் என்று கூறப்படும் வரலாற்றின் குறிப்புக் காண்பாருமுண்டு. இதனை 1340-ல் ஆசிரியர் கூறுவதும் காண்க. திருஞானசம்பந்த நாயனாரும் தமது திருப்பதிகங்களில் எட்டாவது திருப்பாட்டில் இராவணனைப்பற்றி அருளியுள்ளனர். ஆயினும் நாயனார் இதனைக் கூறுவதற்கும் அதற்கும் வேறுபாடு காணலாம். உலகவர். "பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும்எனக்காட்ட" அந்த ஆக்கப்பாட்டினை ஆளுடைய பிள்ளையார் அருளினர் என்று எடுத்துக்காட்டும் ஆசிரியர், ஈண்டு, "அத்தன்மையானாய விராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த்தன்மை யறுத்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர்" என்று காட்டியதன்கருத்தைக் கருதுக. இராவணனது இந்நிகழ்ச்சியை நாயனார் கூறும் இடங்கள் பல. இந்நிகழ்ச்சியினை நேரிற் கண்டார் கூறுவன போன்று அமைந்துள்ளன அவை என்பதும் இங்குக் கருதத்தக்கது. "கடுகிய தோசெ லாது கயிலாய மீது கருதேலுன் வீர மொழிநீ, முடுகுவ தன்று தன்மமென நின்று பாகன் மொழிவானை நன்று முனியா, விடுவடு வென்று சென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள், நெடுநெடு விற்றுவீழ" (பொது - தசபுராணம் - பழம்பஞ்சுரம் - 10) முதலியவை பார்க்க. தலவிசேடம் 234-ல் உரைத்தவை பார்க்க. பக்கம் - l - 271. 1336. | மன்னும் பதிகம் முதுபா டியபின் வயிறுத் றடுசூ லைமறப் பிணிதான் அந்நின் றநிலைக் கணகன் றிடலும் அடியே னுயிரோ டருடந் த"தெனாச் |
அறிஞர் துணிபு. இதுபோலவே மணிவாசகப் பெருமானார்க்கும் மனைவி மக்களுண்டு என்று விசாரித்து அபசாரப்படும் மலமாக்களும் உளர். இத்தகைய தகாத ஆராய்ச்சியின் பிழை "ஓது மெல்லை யுலப்பில வாதலின் யாது மாராய்ச்சியில்லை," "ஆதியார் தாளடைந் தின்ன கேட்கவே" என்று ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கை ஆசிரியர் விரித்தருளிய தன்மையைக் கருதினால் விளங்கும். |