பக்கம் எண் :

402திருவேங்கடமாலை

3.மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம்பிறவி
வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே - சோலைத்
தருமா தரைநட்டான் றண்முல்லை யாயர்
தருமா தரைநட்டான் சார்பு.

(இ - ள்.) மாலை - மயக்கத்தை, கோலி - தம்மிடத்திலே கொண்டு, திரியும் - (பலவிடங்களிலும்) அலைகின்ற, வையகத்தோர்தம் - நிலவுலகத்தி லுள்ளாருடைய, பிறவி - பிறப்பாகிய, வேலைக்கு - கடலுக்கு, ஓர் வங்கம் ஆம் - ஒரு மரக்கலம் போன்ற, வேங்கடமே - , - சோலை தரு - (தேவேந்திரனது நந்தனவனமென்னும்) பூஞ்சோலையி லுள்ள பாரிசாத விருட்சத்தை, மா தரை நட்டான் - பெரிய பூமியிற் கொணர்ந்து நாட்டியவனும், தண் - (நீர்வளத்தாற்) குளிர்ச்சியான, முல்லை - முல்லைநிலத்தில் வசிக்கின்ற, ஆயர் - இடையர்கள், தரும் - பெற்ற, மாதரை - பெண்களை (கோபஸ்திரீகளை), நட்டான் - விரும்பிக் கூடியவனு மாகிய திருமால், சார்பு - (திருவுள்ள முவந்து) சார்ந்திருக்கு மிடமாம்; (எ - று.) - கடற்கு - கடல்கடத்தற்கு.

மால் - மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை முதலியன. கோலி என்ற இறந்தகாலவினையெச்சத்தில், கோல் - வினைப்பகுதி. மாலைக் கோலித் திரியும் வையகத்தோர் என்பதற்கு - எம்பெருமானை நாடித் திவ்விய தேசயாத்திரை செய்கின்ற நிலவுலகத்தாரென்றும் பொருள்கொள்ளலாம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி மேன்மேல் வருதலாலும், அச்சந்தருதலாலும், கடத்தற்கு அரிதாதலாலும், பிறப்புக் கடலெனப்பட்டது. கடலி லிறங்கியவர் அக்கடலைக் கடந்து அக்கரை சேர்தற்கு மரக்கலம் கருவியாவதுபோலப் பிறப்பில் அகப்பட்டவர் அதனையொழித்து முத்தி பெறுதற்குத் திருவேங்கடமலை சாதனமாகு மென்க. எனவே, வேங்கடம் தன்னையடைந்தார்க்கு வினையொழித்து வீடுதரவல்ல தென்றதாம்.

சத்தியபாமையின் பொருட்டுக் கண்ணன் தேவலோகத்திலிருந்து பாரி ஜாத தருவைத் துவாரகைக்குக் கொணர்ந்து நாட்டின வரலாறும், கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வளர்ந்தருளியபொழுது தன்னிடங்காதல்கொண்ட பல கோபகன்னிகைகளைத் தானும் காதலித்து அவர்களோடு கூடிக் குலாவினமையும், பாகவதத்திற் பிரசித்தம். முல்லை - காடும், காடுசார்ந்த இடமும். ஆயர் - பசுக்களுக்கு உரியவர். நட்டான் - இறந்தகால வினையாலணையும்பெயர்; முறையே நடு, நள் - பகுதிகள். சார்பு - தொழிலாகுபெயர்.

இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க.

(3)

4.நாலு திசைமுகமு நண்ணுதலா லொண்கமல
மேலுறலால் வேதாவாம் வேங்கடமே - சாலுறையு
மண்மயக்கந் தேற்றுவித்தான் மாற்றுதல்போ லாரியனா
லுண்மயக்கந் தேற்றுவித்தா னூர்.

(இ - ள்.) நாலு திசை முகமும் நண்ணுதலால் - நான்கு திசைகளையும் நோக்கிய நான்கு முகங்கள் பொருந்தியிருத்தலால் (நான்குதிக்கினிடங்களி