பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி603

னான, எங்கள் அப்பனுடை - எமது திருவேங்கட முடையானுடைய, பேர் பல - பல திருநாமங்கள், - துன்பம் களையும் - (தம்மைச் சொன்னவர்களுடைய) கிலேசங்களையொழிக்கும்; சனனம் களையும் - பிறப்பை வேரோடு அழிக்கும்; தொலைவு அறு பேர் இன்பங்களையும் கதிகளையும் தரும் - முடிவில்லாத பேரின்பங்களையும் சிறந்தபதவிகளையும் தரும்; (எ - று.)

இது, திருநாம மகிமை. "குலந்தருஞ் செல்வந்தந்திடு அடியார்படுதுய ராயினவெல்லாம், நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெரு நிலமளிக்கும், வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும், நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னுநாமம்" என்ற பெரியதிருமொழியையுங் காண்க. ஸ்ரீமந்நாராயணன் தனதுதிருமேனியில் திருநாபியிலே பிரமனையும், வலப்பக்கத்திலே சிவனையும், திருமார்பிலே திருமகளையும் வைத்திருத்தலை, 'தன்பங்களையும்படி மூவரை வைத்து' எனக்குறித்தார்; "பிறைதங்குசடையானை வலத்தேவைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்துக், கறைதங்குவேற்றடங்கண்திருவை மார்பிற் கலந்தவன்", "ஏறனைப் பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து", "திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தைபெருமாற்கு அரன்", "ஏறாளு மிறையோனுந் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந் தனியுடம்பன்", "சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாசகம்", "மலர்மகள் நின் ஆகத்தாள் - செய்ய, மறையான் நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த, இறையான் நின்ஆகத்திறை" என்ற ஆழ்வார்களருளிச்செயல் பல காண்க. மூவர் - தொகைக்குறிப்பு. தொலைவறு பேரின்பம் - "அந்தமில் பேரின்பம்." 'உண்டானடிப்பேர்பல' என்ற பாடத்துக்கு, எம்பெருமானுடைய திருவடிகளின் திருநாமங்கள் பல வென்க; அடி - தொன்றுதொட்டுவருகிற எனினுமாம்.

(95)

(தலைவனைப்பிரிந்த தலைவி, கடலைநோக்கி இரங்கிக்கூறல்.)

96.பலகுவளைக்குட்சிலகஞ்சம்போலும்படிவவப்ப
னலகுவளைக்குமுன்னுண்டா னின்மாட்டுநணுகிலனோ
வுலகுவளைக்குங்கடலே நின்கண்முத்துகுத்திரங்கி
யிலகுவளைக்குலஞ்சிந்தித்துஞ்சாயின்றிராமுற்றுமே.

(இ - ள்.) உலகு வளைக்கும் கடலே - உலகத்தைச்சூழ்ந்திருக்கிற கடலே! - நின் கண் முத்து உகுத்து - உனதுகண்களினின்று முத்துப்போன்ற நீர்த்துளிகளைச்சொரிந்து (உன்னிடத்தினின்று முத்துக்களைச் சிந்தி). இரங்கி - புலம்பி (ஒலித்து), இலகு வளை குலம் சிந்தி - விளங்குகின்ற கைவளைகளின் வரிசையைக் கீழேசிந்தி (விளங்குகிற சங்குகளின் கூட்டத்தை வெளியேசிதறி), இன்று இரா முற்றும் - இன்றை யிராப்பொழுது முழுவதும், துஞ்சாய் - தூங்குகின்றாயில்லை (அமைதிகொண்டிருக்கின்றாயில்லை); (ஆதலால்), பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவம் அப்பன் - பலநீலோற்பலமலர்களின் இடையிடையே சிலசெந்தாமரைமலர்கள் (பூத்தன) போன்ற திருமேனியையுடைய ஸ்வாமியான, அளைக்கு முன் நல கு உண்டான் -