பக்கம் எண் :

604திருவேங்கடத்தந்தாதி

(கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயையுண்பதற்குமுன்னே (கற்பாந்தகாலத்திலே) நல்லபூமியை விழுங்கியவனுமான தலைவன், நின்மாட்டும் நணுகிலனோ - (என்னிடத்திற்போலவே) உன்னிடத்திலும் வந்துசேர்ந்திலனோ?

இதற்குத் துறைவிவரம், கீழ் 19 - ஆஞ்செய்யுட்குக் கூறியதுகொண்டு உணர்க. அது, தோழிகூற்று; இது, தலைவிகூற்று. இது, கடலைநோக்கித் தன்னோடொப்பத் துன்பமுறுவதாகக்கருதிக் கூறியது. இங்ஙனம் தலைவி சொல்லுதலின் பயன் - தலைமகன் கேட்பின், விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்வன்; தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச்செய்வள்; யாரும் கேளாராயின், தலைவிதானே சொல்லி ஆறினளாம். 'நின்மாட்டும்நணுகிலனோ' என்பதற்கு - (இத்தலைவியிடத்திற் போலவே) உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ? என்று பொருள்கொண்டு, இதனையும் தோழிகூற்றென்றலுமாம். இதுவும், செம்மொழிச்சிலேடையுவமையணி கொண்டது. 'நின்கண் முத்துகுத்து' என்றது முதலிய தொடர்கள் இருபொருள்பட்டமை காண்க. தலைவி வளையல்களைச் சிந்துதல், பிரிவாற்றாமைத்துயரால் உடல் மிகமெலிந்தது பற்றி.

பல குவளைமலர்கள் - எம்பெருமானது நீலநிறமுள்ள திருமேனிக்கும், அவற்றிடையே சிலசெந்தாமரைமலர்கள் - வாய் கண் கை உந்தி பதம் ஆகிய திருவவயவங்கட்கும் உவமை. குவலயம் என்ற வடசொல், குவளை என விகாரப்பட்டது. கஞ்ஜம் - வடசொல்: நீரில் தோன்றுவதென்று பொருள்படும்: கம் - நீர். நல - நல்ல என்பதன் தொகுத்தல். கு - வடசொல். நின்மாட்டும், உம் - இறந்தது தழுவிய எச்சம். முத்து - நீர்த்துளியைக் குறிக்கும்போது, உவமையாகுபெயர்.

எம்பெருமானது பிரிவை யாற்றாமல் வருந்துகின்ற ஐயங்கார் தமக்கு உள்ள கலக்கத்தால் தம் கண்ணெதிர்ப்படுகிற பொருள்களையெல்லாம் தம்மைப்போலவே எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்றனவாகக்கொண்டு, கடலைநோக்கி 'நீயும் நான்பட்டது படுகின்றனையோ?' என்று வினவுதல், இதற்கு உள்ளுறைபொருள். தம்மைப்போலவே பிறரையும் பாவித்தல், பெரியோரியல்பு. இவர்க்கு, வளைக்குலம் சிந்துதல் - அடிமைக்கு அறிகுறியான ஆத்மகுணங்கள் குலையப்பெறுதல்; பாரதந்திரியம்நீங்கி ஸ்வாதந்திரியம் மிகுதல். மற்றவை, முன்கூறியவாற்றால் விளங்கும்.

"காமுற்ற கையறவோ டெல்லே யிராப்பகல், நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால், தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த, யாமுற்றதுற்றாயோ வாழிகனைகடலே" என்ற திருவாய்மொழிப்பாசுரத்தைப் பின்பற்றியது, இது. "வாயினிரங்கினை யாரமெறிந்தனை வால்வளை சிந்தினை தண், பாயலையுந்தினை மாலை யடைந்தனை பாரிலுறங்கிலையால், கோயிலரங்கனை மாகனகந்திகழ் கோகனகம்பொலியும், ஆயிழைநண்பனை நீயும்விரும்பினையாகு நெடுங்கடலே" என்றார் திருவரங்கக்கலம்பகத்தும். இவை, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியன. (இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை, "போவாய் வருவாய் புரண்டுவிழுந் திரங்கி