நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய், அரவகற்றுமென்போல வார்கலியே மாதை, யிரவகற்றி வந்தாய்கொ லின்று" என நளவெண்பாவிற் காண்க.) (96) (நீட்டித்து வந்த தலைவனோடு தலைவி ஊடிப்பேசுதல்.) 97. | முற்றிலைப்பந்தைக்கழங்கைக்கொண்டோடினை முன்னும்பின்னு | | மற்றிலைதீமை யவைபொறுத்தோந் தொல்லையாலினிளங் | | கற்றிலைமேற்றுயில்வேங்கடவா வின்றுன்கான்மலராற் | | சிற்றிலைத்தீர்த்தற்குப்பெருவீட்டினைச்செய்தருளே. | (இ - ள்.) தொல்லை - முற்காலத்தில் (பிரளயகாலத்தில்), ஆலின் இளங்கன்று இலைமேல் - இளமையான ஆலங்கன்றினது இளந்தளிரின்மேல், துயில் - பள்ளிகொண்டு யோகநித்திரை செய்த, வேங்கடவா - திருவேங்கடமுடையானே! - முன்னும் - முன்னமும், (நீ எம்முடைய), முற்றிலை - சிறுமுறத்தையும், பந்தை - பந்தையும், கழங்கை - (ஆடுதற்குஉரிய) கழற்காய்களையும், கொண்டு ஓடினை - எடுத்துக்கொண்டு ஓடினாய்; பின்னும் தீமை அற்றிலை - பின்பும் (எம்பக்கல்) தீங்குசெய்தலை ஒழிந்தாயில்லை; அவை பொறுத்தோம் - அப்பொல்லாங்குகளையெல்லாம் யாம் பொறுத்திட்டோம்; இன்று - இப்பொழுது, உன் கால் மலரால் - உனது திருவடித்தாமரையினால், சிற்றிலை தீர்த்ததற்கு - (யாம் மணல்கொண்டு விளையாட்டாக அமைத்த) சிறுவீட்டைச் சிதைத்ததற்கு ஈடாக, பெரு வீட்டினை செய்தருள் - பெரியதொரு வீட்டை (எமக்கு)க் கட்டிக்கொடுப்பாய்; (எ - று.) இன்றியமையாததொரு காரியத்தினிமித்தம் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவத்தில் வாரானாய்க் காரிய வசத்தாற் சிறிதுநீட்டிக்க, அதற்குள்ளே தலைவி 'தலைவன்வாராதது, என்னை உபேக்ஷித்து என்னினும் அழகுசிறந்த வேறுபலமகளிர்பக்கல் உறவுகொண்டதனாலாம்' என்று எண்ணிப் பிணங்கி 'இனி அவன் வந்தாலும் நாம் முகங் கொடுப்பதில்லை' என்று நிச்சயித்துத் தனது தோழியரையும் தான்வளர்த்த கிளி பூவை முதலிய பேசும்பறவைகளையும் தன்வழிபடுத்திவைத்துக்கொண்டு ஓரிடத்திலே அவர்களோடு விளையாடுகிற வியாஜத்தாற் பராமுகமாயிருக்க, பின்பு மிக்க அன்போடு வெகுவிரைவாக மீண்டுவந்த தலைவன், பிரணயகோபத்தால் அணுகவொண்ணாதபடி யிருக்கின்ற இவளிருப்பைக் கண்டு வருந்திச் சிந்தித்து அருகிற்சென்று தோழியர்மூலமாக இவளுடைய ஊடலைத் தீர்க்கக் கருதி நோக்கியவிடத்து, அவர்களும் தலைவியின்கோட் பாட்டின்படி தங்களில் ஒருமித்து அவனை அநாதரித்து முகம்மாறி மிக்க கோபங்காட்ட, அவ்வாயிலைப் பெறானாய்க் கிளி பூவை முதலியவற்றைக் கொண்டு ஊடல் தணிக்கப்பார்த்து அவையும் தலைவியின் சங்கேதப்படி தன்னை உபேக்ஷித்ததனால் அவ்வாயிலையும்பெறாது மிகவருத்தமுற்று, அசேதநமாகையால் தன்னை உபேக்ஷித்துப்போகமாட்டாமல் அங்குக்கிடந்த இவளுடைய விளையாட்டுக்கருவிகளான முற்றிலையும் பந்தையும் கழங்கையும் எடுத்து அவற்றைத் தன்உடம்பின்மேற்படவைத்துத் தழுவியும் அன்போடு நோக்கியும் கண்களில் ஒற்றியும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் ஒரு |