பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி611

வமான, நூறு கட்டளை சேர் கலித்துறை - நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுள்களும், - அளை தொட்டு உண்ட பிரானுக்கு - வெண்ணெயைக் கையினா லெடுத்து அமுதுசெய்த பிரபுவான, மட்டு அளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்கு - வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கணுள்ள திருவேங்கடமலையில் வாழ்கிற எம்பெருமானுக்கு, அன்பு ஆம் . பிரியமாம்; (எ - று.)

பட்டர் தூயபொற்றாளுள்தளையுண்ட - பட்டரது அந்தரங்கசிஷ்யரான என்றபடி. பட்டர் - கூரத்தாழ்வானுடைய குமாரர், எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகிற பட்ட ரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்; இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர். கட்டளைசேர்கலித்துறை - கலிப்பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான கலித்துறையினும் வேறுபட்டுவருவது; அதன் இலக்கணம் - "முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே" எனக் காண்க. மட்டு - தேனுமாம். தாள் உள் தளையுண்ட - தாளினிடத்து மனப் பிணிப்புப் பொருந்திய எனினுமாம்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது. (பிரயோகவிவேகநூலார் 'இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,' வடநூலார் தாமே பதி+மும் உரையுஞ் செய்வார்', 'இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க' என்றவை கருதத்தக்கன.) இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

திருவேங்கடத்தந்தாதி முற்றிற்று.