பக்கம் எண் :

610திருவேங்கடத்தந்தாதி

எது என்ற வினாப்பெயர் "ஆல்" என்ற மூன்றனுருபை யேற்கும்போது இடையிலே தகரவொற்றுவிரிந்து, எத்தால் என நின்றது. கருதுதிர் என்ற முன்னிலைமுற்று, நிகழ்காலத்தில் வந்தது.

(99)

100.கருமலையும்மருந்துங்கண்ணுமாவியுங்காப்புமவன்
றருமலையுந்தியபேரின்பவெள்ளமுந்தாய்தந்தையும்
வருமலையுந்திருப்பாலாழியுந்திருவைகுந்தமுந்
திருமலையும்முடையானெனக்கீந்ததிருவடியே.

(இ - ள்.) வரு மலையும் - பொருந்திய திருக்கடல்மல்லை யென்கிற ஸ்தலத்தையும், திரு பால் ஆழியும் - திருப்பாற்கடலையும், திரு வைகுந்தமும் - பரமபதத்தையும், திருமலையும் - திருவேங்கடமலையையும், உடையான் - (தனக்குத் தங்குமிடமாக) உடையவனான எம்பெருமான், எனக்கு ஈந்த - அடியேனுக்கு அருளிய, திரு அடி - சீர்பாதங்கள், - (அடியேனுக்கு), - கரு மலையும் மருந்தும் - பிறவிநோயையொழிக்கிற மருந்தும், கண்ணும் -, ஆவியும் - உயிரும், காப்பும் - பாதுகாவலும், அவன் தரும் அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் - அவன் (பரமபதத்தில்) தந்தருளும் அலைகளையெறிகிற பேராநந்தப்பெருக்கும், தாய் தந்தையும் - தாய்தந்தையருமாம்; (எ - று.)

கரு மலையும் மருந்து - "மருந்தாங் கருவல்லிக்கு" என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும். திருவடியை 'மருந்து' என்றதற்கு ஏற்ப, பிறவியை "நோய்" என்னாததனால், ஏகதேசவுருவகவணி. இன்றியமையாதனவாய் அருமைபாராட்டப்படுதல்பற்றி 'கண்' என்றும், அங்ஙனம் தாரகமாதல் பற்றி 'உயிர்' என்றுங் கூறப்பட்டன. காப்பு - ரக்ஷகம். வெள்ளமென்றதற்கு ஏற்ப 'அலையுந்திய' என்ற அடைமொழி கொடுத்தது, பேரின்பத்தின்மிகுதியை யுணர்த்தும்; இது, சஞ்சலத்தையொழித்த என்றும் பொருள்படும். அன்புடன் ஆவனசெய்தலில், தாயும் தந்தையுமா மென்க. இச்செய்யுள் - பலபடப்புனைவணி. மூன்றாமடியில், மல்லை யென்பது 'மலை' எனத் தொகுத்தல்விகாரப்பட்டது. திருக்கடன்மல்லை - தொண்டைநாட்டுத்திருப்பதிகளி லொன்று. வரும் அலையும் என்று எடுத்து, இரண்டுபெயரெச்சங்களையும் திருப்பாற்கடலுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. வரும் அலை - பிரளயப்பெருங்கடல் எனினுமாம்.

(100)

மட்டளை தண்டலைசூழ்வடவேங்கடவாணனுக்குத்
தொட்டளையுண்டபிரானுக்கன்பாம்பட்டர்தூயபொற்றா
ளுட்டளையுண்டமணவாளதாசனுகந்துரைத்த
கட்டளைசேர்திருவந்தாதிநூறுகலித்துறையே.

(இ - ள்.) பட்டர் - பட்டரென்ற ஆசாரியருடைய, தூ பொன் தானுள் பரிசுத்தமான அழகிய திருவடிகளிலே, தளை யுண்ட - பக்தியினாலாயே சம்பந்தம்பெற்ற, மணவாளதாசன் - அழகியமணவாளதாசன், உகந்து உரைத்த - விரும்பிப் பாடிய, திரு அந்தாதி - சிறந்த அந்தாதிப்பிரபந்தவடி