பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்871

ஸ்ரீ

சீரங்கநாயகரூசல்.

சீரங்கநாயகரைப்பற்றிப் பாடிய ஊசல் என விரியும். ஊசலாவது - ஆசிரியவிருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல், 'ஆடிரூசல்,' 'ஆடா மோவூசல்,' 'ஆடுகவூசல்' என ஒன்றால் முடிவுறக் கூறுவது; இது, தொண் ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்று.

தனியன்.

அண்டப்பந்தரிற்பற்றுக்கால்களாக
        வறிவுவிட்டங்கரணஞ்சங்கிலிகளாகக்
கொண்டபிறப்பேபலகைவினையசைப்போர்
        கொடுநரகசுவர்க்கப்பூவெளிகடம்மிற்
றண்டலிலேற்றம்மிறக்கந்தங்கலாகத்
        தடுமாறியிடருழக்குமூசன்மாறத்
தொண்டர்க்காமணவாளர்பேரர்கூடித்
        தொகுத்திட்டார்திருவரங்கத்தூசறானே.

(இ - ள்.) அண்டம் பந்தரில் - உலகமாகிய பந்தலிலே, பற்று - பாசமே, கால்கள் ஆக - (விட்டத்தைத்தாங்குவதற்குஉரிய) தூண்களாகவும், - அறிவு - அறிவே, விட்டம் (ஆக) - (சங்கிலியைமாட்டுதற்குஉரிய) உத்தரமாகவும், - கரணம் - இந்திரியங்களே, சங்கிலிகள் ஆக - சங்கிலிகளாகவும், - கொண்ட பிறப்பே - எடுத்த பிறவியே, பலகை (ஆக) - ஊஞ்சற்பலகையாகவும், - வினை - இருவினைகளே, அசைப்போர் (ஆக) - (அவ்வூஞ்சலை) ஆட்டுபவராகவும், - கொடு நரகம் - கொடிய நரகமும், சுவர்க்கம் - சுவர்க்கமும், பூ - பூமியும், (ஆகிய) வெளிகள்தம்மில் - வெளியிடங்களில் (செல்லுதலே), இறக்கம் -இறங்குதலும், தண்டல் இல் ஏற்றம் - தடையின்றி ஏறுதலும், தங்கல் - நிலைபெறுதலும், ஆக - ஆகவும், - (இவ்வாறு), தடுமாறி - அலைந்து, இடர் உழக்கும் - துன்பமனுபவிக்கின்ற, ஊசல் - ஊசலாட்டம், மாற - நீங்கும்படி, - தொண்டர்க்கு ஆ - அடியார்கள் அநுசந்திக்குமாறு, - மணவாளர் - அழகியமணவாளதாசரும், பேரர் - (அவரது) திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்காரும், கூடி - சேர்ந்து, திருவரங்கத்து ஊசல் - ஸ்ரீ ரங்கத்தைக் குறித்ததான ஊசலென்னும் பிரபந்தத்தை, தொகுத்திட்டார் - பாடியருளினார்; (எ - று.)

இது சீரங்கநாயகரூசல் சீரங்கநாயகியாரூசல் என்ற இரண்டு பிரபந் தங்கட்குந் தனியனாகும்: அதுபற்றியே, 'திருவரங்கத்தூசல்' எனப் பொதுப்