தாம்பாடிய பிரபந்தங்களை ஸ்ரீரங்கநாதன் அங்கீகரித்தருளியதற்கு, சிறுகுழந்தையின் குதலைச்சொற்களைப் பெற்றதாய்தந்தையர்கேட்டு மகிழ்தலையும், கிளியின்சொற்களைக் கற்பிப்பவர் கேட்டு உவத்தலையும் உவமை கூறினர். மணவாளதாசன் - தன்மைப்படர்க்கை. (32) 33. | போதாருநான்முகனேமுதலாயுள்ள | | புத்தேளிர்தொழுநாதன்புவனிக்கெல்லா | | மாதாரமாந்தெய்வமானநாத | | னனைத்துயிர்க்குநாதனணியரங்கநாதன் | | சீதாரவிந்தமலர்த்திருவினாதன் | | றிருவூசற்றிருநாமமொருநாலெட்டும் | | வேதாசாரியபட்டர்க்கடிமையான | | வெண்மணிப்பிள்ளைப்பெருமாள்விளம்பினானே. | (இ - ள்.) போது ஆரும் நான்முகனே முதல் ஆய் உள்ள - தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவன் முதலான, புத்தேளிர் - தேவர்கள்யாவரும், தொழும் - வணங்குகின்ற, நாதன் - தலைவனும், புவனிக்கு எல்லாம் - எல்லாவுலகங்கட்கும், ஆதாரம் ஆம் தெய்வம் ஆன - ஆதாரமாகவுள்ளதெய்வமாக இருக்கின்ற, நாதன் - தலைவனும், அனைத்து உயிர்க்கும் - ஜீவவர்க்கங்களெல்லாவற்றிற்கும், நாதன் - தலைவனும், சீத அரவிந்தம் மலர் திருவின் நாதன் - குளிர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமிக்குத் தலைவனுமான, அணி அரங்கம் நாதன் - அழகிய திருவரங்க நாதனைப்பற்றி, திருவூசல் திருநாமம் ஒரு நால் எட்டும் - திருவூசல் என்று பெயர்பெற்ற முப்பத்திரண்டுபாடல்களையும், வேதஆசாரியபட்டர்க்கு அடிமைஆன வெள்மணிபிள்ளைப்பெருமாள் - வேதத்தில்தேர்ந்த ஆசாரியரான பட்டர்க்குச் சிஷ்யராகிய வெண்மைநிறமுள்ள மணிபோலச் சத்துவகுணம் மிகுந்த பிள்ளைப்பெருமாளையங்கார், விளம்பினான் - பாடினார்; (எ - று.) நூலாசிரியர் தம்மைப் பிறன்போலக் கூறிய தற்சிறப்புப்பாயிரம், இது. கூரத்தாழ்வானது திருக்குமாரர்க்கு வேதாசார்யபட்டரென்று ஒரு திருநாம முண்டெனக் கொள்ளினுமாம். சீரங்கநாயகரூசல் முற்றும்.அஷ்டபிரபந்தம் முற்றிற்று. |