பக்கம் எண் :

சீரங்கநாயகியாரூசல்901

கோனேரியப்பனையங்கார்

பாடியருளிய

சீரங்கநாயகியாரூசல்.

காப்பு.

முருகூருமகிழ்மாலையணியுமார்பன்
        முத்தமிழன்கவித்தலைவன்முனிவர்வேந்தன்
றிருகூருமனத்திருணீக்குதயபானு
        சீபராங்குசயோகிதிருநாவீற
னருகூருந்தண்பொருநைவழுதிநாட
        னஃகமலம்பாடினானன்னமேறி
குருகூரன்சடகோபன்காரிமாறன்
        கோகனகமலரடியின்குணங்கள்போற்றி.

நூல்.

1,நீராழிநிறத்தரங்கரடிகள்வாழ
        நெடுமகுடப்பணிவாழக்கருடன்வாழப்
பேராழிசெலுத்தியசேனையர்கோன்வாழப்
        பேய்பூதன்பொய்கைமுதற்பதின்மர்வாழ
வோராழிக்கதிர்வாழத்திங்கள்வாழ
        வும்மடியார்மிகவாழவுலகம்வாழச்
சீராழிசங்குகதைசிலைவாள்வாழச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
2.துங்கமலர்ப்பந்தரின்கீழ்ப்பதுமராகத்
        தூணிறுத்திவயிரவிட்டந்தொகுத்துமீதிற்
றங்கநெடுஞ்சங்கிலிவிட்டதின்மாணிக்கத்
        தவிசுபுனைந்தலங்கரித்தவூசன்மீதின்
மங்கலநாண்டிருவாவாராடிரூசல்
        மதிலரங்கர்தமக்கினியாராடிரூசல்
செங்கமலமாளிகையாராடிரூசல்
        சீரங்கநாயகியாராடிரூசல்.