பக்கம் எண் :


772திருத்தொண்டர் புராணம்

 

கல்வெட்டில் திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கு (ஓதுவார்க்கு) காணிகொடுத்த நிபந்த விபரம் காணப்படுகிறது. இக்கோயிலின் திருநாவுக்கரைய தேவருக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதத்தை சிவயோகிகளும் அபூர்விகளுமே பெற வேண்டுமென்றும் இவர்களுக்கென குளக்கரையில் ஒரு மடம் ஏற்பட்டிருந்ததென்றும் ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

தொகுப்பு

அப்பர் சுவாமிகளைப் பற்றி கல்வெட்டுக்களிற் காணும் விவரங்களைப் பாகுபடுத்தி எழுதினால் அடியிற்கண்ட செய்திகளை அறியலாம்

I நாயனாரது பெயர்கள்

(1) திருநாவுக்கரசர்

- 402/08 திருவீழிமிழலை

(2) திருநாவுக்கரையன

்- 330/10 திருமயானம்

(3) திருநாவுக்கரசுதேவர்

- 121/04 தீர்த்த நகரி

"

- 316/09 திருக்கச்சூர்

"

- 556/06 அகத்தியகொண்ட

"

- 117/08 திருப்பத்தூர்

(4) திருநாவுக்கரசு நாயனார்

- 186/08 கோவிலூர்

(5) திருநாவுடையபிள்ளையார்

- 294/1911 சூலமங்கலம்

(6) வாகீசர்

- 586/93 கீரனூர்

"

- 49/03 திருவதிகை

ஆகவே சோழர் காலத்திலே திருநாவுக்கரசு, வாகீசர் என்ற இரு பெயர்களே வழிவழி வந்தன. பிள்ளைத் திருநாமமாகிய மருணீக்கியார் என்பதும், அதிகமா யழைக்கும் பெயராகிய அப்பர் என்பதும் சோழர் காலத்தில் வழங்கவில்லை போலும்.

II நாயனாரது கோயில்களும், அவைகளைத் தாபித்த காலமும், தானங்களும்

(1) தஞ்சை ராசராசேச்சுரம் உடையார்; கி. பி. 1014. இராசராசர் 29ம் ஆண்டு அப்பர் முதலியவர்களின் உருவங்களைத் தாபித்ததும் - தானம் செய்ததும் (98/1888).

(2) தஞ்சை மேற்படி; கி. பி. 1017 இராஜேந்திரன் 3ம் ஆண்டு அப்பர் முதலிய 4 உருவங்களும் இரண்டு திருவிளக்குகளும் பெரிய மடல் ஒன்றும்.

(3) திருவலஞ்சுழி; 115 மார்ச்சு 21-2 ராஜராஜன் II 12 ஆண்டு, திருநாவுக்கரசுதேவர் கண்ணப்பர் வரதநார் உருவத்தாபனம் - பூதானம் 528/02

(4) திருக்கச்சூர்; அஞ்சனாக்ஷியம்மை ஆலயம் 11780 - 216 குலோத்துங்கன் III திருநாவுக்கரசுதேவர் உருவத்தாபனம் 316/1909

(5) சித்தூர்; அகத்தியர் கொண்டா 1192 வீரராஜேந்திரன் (குலோத்துங்கன் III) இராச உத்தம சோழ கங்கை என்ற செல்வ கங்கை; திருநாவுக்கரசு தேவரைத் தாபித்தது. (559/1906)

(6) கோவிலூர்; (திருவுசாத்தானம்) மந்திரபுரீசர் 1255 கி. பி. இராஜேந்திரன் III 10 ஆ. பிள்ளையார் நாயனார் (சம்பந்தர்), திருநாவுக்கரசு நாயனார் இவர்கள் கோயில்களுக்கு பூதானம் (186/1908)

(7) சேர்மாதேவி; அப்பர் ஆலயம் 1267-ஜடாவர்மன் வீரபாண்டியன் 14 ஆண்டு (185, 187, /95)

(8) தீர்த்தநகிரி; (திருத்தினை நகர்) 1271 மாதவர்மன் வீரபாண்டியன்; திருநாவுக்கரசுதேவர் திருவிழா முதல் 12 திருவிழாக்களுக்கு வரி தானம். இங்கே நால்வர் உருவங்களும் சிறந்தவை. (121/04)

(9) திருப்பத்தூர்; 1295 விக்கிரம பாண்டியன் 12 ஆண்டு; திருநாவுக்கரசு தேவர் உருவத்தை ஒரு தேவரையன் தாபித்தது.